13வது பொதுத் தேர்தல் பற்றிச் செய்திகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் சிலருக்கு அரசியல்வாதிகளிடமிருந்து பணமும் இதர சலுகைகளும் கிடைத்துள்ளன.
சுதந்திர இதழியல் மையத்தின் செயல்முறை இயக்குனர் மஸ்ஜலிஸா ஹம்சா இதனைத் தெரிவித்தார். செய்தியாளர்களின் பொதுத் தேர்தல் அனுபவம் பற்றிய ஆய்வு ஒன்றுக்காக நேர்காணல் காணப்பட்ட செய்தியாளர்களில் பாதிக்குமேற்பட்டோர் பணமும் சலுகைகளும் பெற்றதை ஒப்புக்கொண்டார்கள் என்றாரவர்.
இவங்கேல்லாம் பண பேய் தீனிகள் , காட்டி கொடுத்த நல்ல மனிதர்கள்.
இவனுங்க செத்த பிணத்தை கூட பணம் கொடுத்து வாங்கி காரியத்தை
சாதிப்பாணுவ.
அரசியல்வாதிகள் செய்தியாளர்களுக்கு பணம் கொடுத்தனரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பழனிவேல் நேரடியாகவே கேமரன் மலை மக்களுக்கு லட்சக்கணக்கில் கொடுத்தார். கூறுகெட்ட அரசாங்கம், நாறிவிட்ட அரசியல்வாதிகள்.
pru14 நாம் கண் விளித்து செயல்படுவோம்.
என்ன செய்வது மலேசிய நாளிதழ்கள் அளவுக்கு மீறிய விளக்கென்னைகள் !
தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கும் ஷா ஆலமில் லட்சக்கணக்கில் அள்ளி அள்ளி கொடுத்தார்கள்…அந்த நன்றிக் கடனுக்காக தேர்தல் சமயத்தில் ரொம்பவும் அடக்கியே வாசித்தார்கள். எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்ட அவர்கள் சமுதாயத்தையே அடகு வைத்த அந்த மடையர்கள். அவர்களா சமுதாயத்துக்காக பாடுபடுபவர்கள்…? ஓநாய்கள்.
எந்த கட்சி அரசியல்வாதிகள் என்று சொல்லவில்லையே!
சும்மா பத்திரிக்கை காரர்களை மட்டமாக பேசாதீர்கள், குறைந்த சம்பளத்தில் மழை வெயில், நேரம் பாராமல் உழைக்கும் செய்தியாளர்களை ஓநாய் என்று கூற வேண்டாம், சிலர் கடன் வாங்கி வாழ வேண்டிய சூழ்நிலை, 1000 வெள்ளி சம்பளத்தில் இணையதளத்திற்கு மாதம் 120 வெள்ளி கட்டவேண்டும், பெட்ரோல் மாதம் 300 வெள்ளி, பத்திரிகை நிறுவனம் சம்பளத்தை முறையாக போடுப்பதில்லை, ஓவர் டைம் கிடையாது, ஆங்கில பத்திரிக்கை, மலாய் பத்திரிக்கைகளின் நிருபர்களுக்கு எல்லாம் உண்டு, மாதம் 3000 வெள்ளி சம்பளம், கேமிரா தனியாக உண்டு, ஆனால் தமிழ் பத்திரிக்கைகள் அப்படியல்ல, ஆசிரியர்களுக்கு நிருபர் கோப்பி காசு கொடுக்கவேண்டும் இல்லை என்றால் அனுப்பிய செய்தி வராது, பாவம் நைனா தமிழ் பத்திரிக்கை நிருபர்கள், நாயாய் உழைப்பவர்கள் அவர்களை ஓநாய் என்று கூறவேண்டாம்….!!!!!!!!
தமிழ்ப்பித்தனே..
தமிழ்ப்பத்திரிகை நிருபர்களை யாரும் இங்கே குறை சொல்லவில்லை. நாங்கள் சொல்வதும் திட்டுவதும் பத்திரிகை ஆசிரியர்களைத்தான். நீங்கள் இப்படி எழுதியதற்காக உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒன்று சொல்கிறேன். பத்திரிகைகளில் செய்திகள் போடுவதற்கும் கூட சில நிருபர்கள் அப்பாவி மக்களிடம் ‘காசு’ வசூலிப்பதும் அப்படித் தராவிட்டால் செய்தி வராது என்பதும் தெரியுமா? சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லியாச்சு எவனும் எந்த ஆணியையும் புடுங்கவில்லை.