வெளியார்தான் கேண்டீன் விவகாரத்தைப் பெரிதாக வளர்த்து விட்டார்கள்: இட்ரிஸ் குற்றச்சாட்டு

1-idrisaஸ்ரீபிரிஸ்தானாவில் குளியலறை கேண்டீனாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் முடியும் நிலையில் இருந்த வேளையில், அதில் சம்பந்தப்படாதவர்கள் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டார்கள்  என கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸொ இன்று  குற்றம் சாட்டினார்.

அவர் இன்று அப்பள்ளிக்கு திடீர் வருகை மேற்கொண்டார்.

“பெற்றோர் உண்மைநிலையைப் புரிந்துகொண்டு  அதைப் பெரிதுபடுத்தவில்லை. அதைப் புரிந்துகொள்ளாத வெளியார்தான் பிரச்னைக்கே காரணமாகும்.

“அச்சம்பவம் ஒரு இன விவகாரமாக மாறும் அளவுக்கு அதைப் பெரிதுபடுத்தி விட்டார்கள்”, என்றாரவர்.