அசிஸ் பாரி: சின் பெங்கிற்கு அளித்த வாக்குப்படி நடந்து கொள்ளுங்கள்

chin pengஅளித்த வாக்குறுதிகளை மதியுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் மரணத்தை தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் இன்று அம்னோ-பாரிசான் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கினார்.

தமது சுடலை நீறை மலேசியாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற சின் பெங்கின் இறுதி வேண்டுகோளை  உள்துறை அமைச்சர் அஹமட் ஸாஹிட் ஹமிடியும் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கரும் தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வந்தால், மலேசிய அரசாங்கம் அதன் நம்பகத்தன்மையை இழக்கும் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறினார்.

மலேசிய அரசாங்கமும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் 1989 ஆம் ஆண்டில் கையொப்பமிட்ட அமைதி ஒப்பந்தத்தை சுட்டிக் காட்டிய அவர், “இராணுவம் மற்றும் போலீஸ் படை முன்னாள் வீரர்களின் உணர்வுகளை முடுக்கி விடுவதை நிறுத்துங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது வாயை மூடுங்கள்!”, என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான அப்துல் அசிஸ் பாரி ஓர் ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.

அவசர காலத்தில் பல போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களின் மரணத்திற்கு பொறுப்பான சின் பெங்கின் அஸ்தி நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் பொருட்டு அனைத்து நுழைவு  நிலயங்களும் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் கூறியிருந்தார்.

“காலிட் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவருக்கு முன்பிருந்தவர்களை கம்யூனிஸ்ட்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள போலீஸ் ஏன் ஒப்புக் கொண்டது என்று கேட்க வேண்டும்”, என்று அப்துல் அசிஸ் காட்டமாக கூறினார்.

மனுவை நிராகரித்தது தவறாகும்

1989 ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டதன் வழி மலேசியா கம்யூனிஸ்ட்களை ஆரவாரமின்றிAbdul aziz Bari on Chin Peng அங்கீகரித்துள்ளது என்று அப்துல் அசிஸ் மேலும் கூறினார்.

“திரும்பி வருவதற்காக தாக்கல் செய்த சின் பெங்கின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது தவறாகும். அவரின் குடியுரிமையை நிரூபிப்பதற்கு பிறப்புப் பத்திரம் போன்ற ஆவணங்களை நீதிபதிகள் கோரினர். அது அவசர காலத்தின் உச்சகட்டம். சின் பெங், சரியோ தவறோ, தலைமறைவானர் என்பது அவர்களுக்குத் தெரியும்”, என்றாரவர்.

நீதிமன்றம் சாத்தியமற்ற ஒன்றை சின் பெங்கிடமிருந்து கேட்டுள்ளது. அவர் பிரிட்டீசாரை எதிர்த்து போரிட்டவர் என்று அப்துல் அசிஸ் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அம்னோ மற்றும் பாரிசான் தலைவர்களும் கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளுக்காக முன்பு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டிய அப்துல் அசிஸ், கட்சி (அம்னோ) கம்யூனிஸ்ட்களையும் கம்யூனிசத்தையும் தூற்றுவதை நிறுத்த வேண்டும் என்றார்.