‘சின் பெங்கின் அஸ்திக்கு மறுப்புத் தெரிவிப்பதைப் பார்த்து உலகம் சிரிக்கும்’

1 rahimசின் பெங்கின் அஸ்தி நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வந்தால் உலகின் கேலிக்கு  ஆளாவோம் என முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ், ரஹிம் முகம்மட் நூர் எச்சரித்துள்ளார்.

1980-களில், போலீஸ் சிறப்புப் பிரிவுத் தலைவராக இருந்த ரஹிம், அப்போது கம்முனிஸ்டுகளுடன் நடத்தப்பட்டுவந்த அமைதிப் பேச்சுகளுக்குத் தலைமை ஏற்றிருந்தார்.

“அமைதி உடன்பாட்டை வரைவதில் சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதால் அவை பற்றி நன்கு அறிவேன்……

“கம்முனிஸ்டு கட்சியின் உறுப்பினர் என்ற முறையில், உடன்பாடுகளில் வரையறுக்கப்பட்ட சலுகைகளையும் சாதகங்களையும், (நாட்டுக்குள்) திரும்பி வருவது உள்பட,  பெறுவதற்கு முழு தகுதி பெற்றவர்தான் சின் பெங்,”, என்றாரவர்.

மற்ற கம்முனிஸ்டுகள், ரஷிட் மைடின், அப்துல்லா சிடி போன்றோர் மலேசியா திரும்பி வர, குறைந்தபட்சம், வந்துபோகவாவது அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், சின் பெங்குக்கு அந்த அனுமதியும் வழங்கப்பட்டதில்லை என்றார்.

அதற்கு சின் பெங்கின் இனம் ஒரு காரணமா என்று ரஹிமிடம் வினவப்பட்டது.

“அப்படி ஓர் அனுமானத்துக்கு வர நான் தயாராக இல்லை.

“ஆனால், சின் பெங் விவகாரத்தைப் பொறுத்தவரை (அமைதி) உடன்பாடுகளைக் கேலிக்கூத்தாக்கி விட்டோம்”, என்றுரைத்தார்.

TAGS: