மஇகா ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா?

1 micமஇகா இந்தியர்களை கடந்த 30 வருடங்களாக ஏமாற்றிவிட்டது என்றும் அது தற்போது ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர் கட்சி போல் நடந்து கொள்வதில் பயன் இல்லை என்றும்.

மஇகாவை பிரதிநிதித்து அரசாங்கத்தில் இரண்டு முழு அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் இருக்கின்ற பொழுது அமைச்சரவையில் இந்தியர்களின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தைரியமாக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்கிறார் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்

மு.குலசேகரன். அவரது முழு அறிக்கை வருமாறு:

1batu kulaஅண்மையில் ம.இ.கா தலைவர் ஒருவர், பிரதமர் நஜீப் மலாய்க்காரர்களுக்கு 60 பில்லியன் சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தது போலவே இந்தியர்களுக்கும் ஒரு புதிய ஊக்குவிப்பு திட்டத்தை வெளியிட வேண்டுமென்று கேட்டுள்ளார்.

நாட்டில் எல்லா  இனங்களிலும்  ஏழ்மை இருகின்றது, அதுவும் இந்திய சமூகத்தில் அது அவர்களின் ஜனத்தொகையை மிஞ்சியே அதிமோசமாக இருக்கின்றது. ஆனால் எல்லா இனத்துக்கும் தாம் பிரதமர் என்று கூறிக் கொள்ளும் நஜிப், மாலாய்க்காரர்களுக்கு மட்டும் 60 ஆயிரம் கோடி ரிங்கிட் ஒதுக்குவதைப் பார்க்கும் போது அவர் ஒர் இனத்துக்கு மட்டும் பிரதமரா அல்லது மொத்த மலேசியர்களுக்கும் பிரதமரா என்ற சந்தேகம் எழுகின்றது.

அதுவும் அதற்காக அவர் சொன்ன காரணமும்  சமூகவதிகளிடையேயும் நாட்டில் சமத்துவத்தை விரும்புவர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் பேரினவாதியா?

najibமாலாய்க்காரர்கள் அம்னோவுக்கு அதிகமாக கடந்த பொதுத் தேர்தலில் வாக்களிதிருந்ததால் அவர்களின் ஆதரவுக்கு பரிசாக இந்த தொகை ஒதுக்கப்படுகிறதாம். ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் மொத்த மக்களின் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது என்பது  பிரதமருக்கு தெரியாததல்ல. இருந்தும் அவர் இப்படி மலாய்க்காரர்களை  மட்டுமே விழுந்து விழுந்து  கவனிப்பது வரும் அம்னோ தேர்தலை குறி வைத்துத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தன்னுடைய பதவியை தற்காத்துக் கொள்வதற்காக, நாட்டின் சொத்தை ஒரினத்திற்கு மட்டுமே பங்கு போட்டு கொடுப்பது ஒரு வகை பேரினவாதம்.

நாட்டின் வளத்திற்கு எல்லா இனமும் பாடுபடுகிறது. வருமான வரிகளும் எல்லா இனங்களிடமிருந்தும் பெறப்படுகிறது. அப்படி இருக்கையில் எப்படி ஒரு பிரதமர் எல்லா மக்களிடமிருந்தும் பெற்ற பணத்தைக் கொண்டு ஒரே ஒரு இனத்திற்கு மட்டுமே பயன் படும் வகையில் செலவழிப்பத்ய் நியாயமாகும்?

1970 நீல புத்தகம் வழி இந்தியர்களை பொருளாதரத்தில் உயர்த்த திட்டம் ஒன்றை கு. பத்மாநாதன் வரைந்தார். அதன் நோக்கம் 2000 ஆம்  ஆண்டுகளில் நாட்டின் சொத்துடைமையிலும் பங்குரிமையிலும் இந்தியர்களின் அப்போதைய நிலைமையான 1.1மூ ல் இருந்தது 3மூ உயர்த்துவதாக இருந்தது.

ஆனால் அது இன்றைய அளவில் கானல்நீராகவே இருந்து வந்துள்ளது. ம.இ.காவோ பாரிசான் அரசோ அதை அக்கறைகொண்டு  நிறவேற்ற  முயற்சிக்கவில்ல. அதற்கிடையில் தொடர்ச்சியாக ஆட்சி செய்துகொண்டிருக்கும் தேசிய முன்னணியோ, ஒரே இனத்திற்கு மட்டும் வாரிவாரி கொடுத்து உதவிக்கொண்டிருக்கின்றது. அந்தத் தொடர்  உதவிதான் இன்று 60,000 கோடி வெள்ளியில் வந்து நிற்கிறது.

ம.இ.காவில்   இருக்கும் பெரும் புள்ளிகளோ அவர்கள் நன்மையை வேண்டி நடப்பு அரசாங்கத்தின்  உதவியோடு தன்களை உயர்த்திக் கொண்டார்களே தவிர சாதாரண மக்களோ, அடிமட்ட ம.இ.காவினரோ நன்மை ஏதும் அடையவில்லை. ம.இகா இந்தியர்களை கடந்த 30 வருடங்களாக ஏமாற்றிவிட்டது என்பதுதான் உண்மை.

இந்தியர்களில் யாராவது இந்த 30 ஆண்டுகளில் முன்னேறியிருக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் தனி மனித முயற்சியே தவிர அரசாங்கத்தின் உதவியினால் இல்லை.

கடந்த பொதுத் தேர்தலில் 42மூ இந்தியர்கள் மட்டுமே பாரிசானுக்கு ஓட்டளித்திருக்கின்றார்கள். அரசு கேந்திரங்களும் பண பலமும் கொண்டிருந்தும் கூட ம.இ.காவால் இந்தியர்களின்  வாக்கை பாரிசானுக்கு முழுமையாக திருப்பி விட முடியவில்லை. இது தெளிவாக ஒரு விடயத்தை எடுத்துக் காட்டுகிறது.

அதாவது, பாரிசான் போட்ட எந்த ஒரு திட்டமும் வகுக்கப் பட்ட கொள்கைகளும் இந்தியர்களை உள்ளடைக்கியதாக இல்லை. எல்லாம் ஓரினத்தை முதன்மைப்படுத்தியே திட்டமிடபட்டதால், இந்தியர்கள் வெறுப்படைந்து எதிர்கட்சியினரை நாடியிருந்தனர்.

எதிர்க்கட்சி மஇகா?

najib-palanivel-mic-pwtc-n4ஆளும் கட்சியில் இருக்கும் நீங்கள் பல வேளைகளில் எதிர்க்கட்சிகளைப் போல் நடந்து கொள்கிறீர்கள். எதிர்கட்சிக்காரர்கள்தான் குரல் கொடுப்பார்கள், கோரிக்கை விடுப்பார்கள். அதனை அமல்படுத்த வேண்டியது  ஆட்சியில் இருப்பவர்களின் பொறுப்பு. இந்நியதிக்கு மாறாக ஆட்சியில் இருக்கும் நீஙகளே அரசாங்கமாக இருக்கும் பொழுது இந்தியர்களுக்காக எந்த அரசாங்கத்தை நோக்கி குரல் கொடுக்கின்றீர்கள்?

திட்டங்களை வரைந்து அதை செயல்படுத்த வேண்டிய இடத்தில்இருக்கும் நீங்கள் எங்களைப் போல் அரசாங்கத்தையே கேள்வி கேட்பது மிகவும் வேடிக்கையாகவும் நகைப்பு உரியாதாகவும் இருக்கின்றது. நாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை நீங்களும் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்!

ம.இகாவை பிரதிநிதித்து அரசாங்கத்தில் இரண்டு முழு அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் இருக்கின்ற பொழுது அமைச்சரவையில் இந்தியர்களின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தைரியமாக குரல் கொடுக்காமல் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு வெளியில் வந்து பத்திரிகைச் செய்தி கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது.

TAGS: