எம்பிகள், நாடாளுமன்றத்துக்கான கேள்விகளை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு 14 நாள்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்யும் நடைமுறை சரியானதல்ல என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்.
அதில் ‘சர்வாதிகாரத்தனம்’ தெரிகிறது என்றாரவர்.
இதனால் கேள்வி களுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்படும்போது அவை பழையவையாக மாறியிருக்கும். காலத்துக்குப் பொருத்தமானவையாகவும் இருக்க மாட்டா.
இரண்டு நாள்களுக்குமுன்வரை கேள்விகளைத் தாக்கல் செய்ய அனுமதிப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்றாரவர்.
“புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் , நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு எந்தக் கேள்வியையும் நான் சமர்பிக்கவில்லை”, என்றவர் கூறினார்.
கேள்வி… கேலிக்கூத்தான காரணம் ! கேள்வி என்ன என்பது தான் முக்கியம்.. இன்னும் எதையும் உருப்படியா கேட்கலயே ?வெறும் செத்தவன் கேசும் போஸ்ட் மோட்டம் மட்டும்தானே உனது கோசம்.
3 லட்சம் IC BC தேர்தலோடு அபெஷா ?