சின் பெங் இறுதிச் சடங்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் கலந்து கொண்டார்

Chin Peng - funeral - ex Thai PMஇன்று காலை மணி 10.00 அளவில் துயரார்ந்த சூழலில் தொடங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் சவாலிட் யோங்ஜாய்யுத்தின் வருகை சிறிய மாற்றத்தை அளித்தது.

தாம் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது ஒரு “நண்பருக்கு” அளிக்கும் மரியாதையாகும் என்று செய்தியாளர்களிடம் கூறிய சவாலிட், சூழ்நிலைக்கு ஏற்றதல்ல என்பதால் அவர் மேற்கொண்டு எதுவும் கூறுவது மறுத்து விட்டார்.

சவாலிட் 1996-1997 ஆம் ஆண்டுகளில் தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

இறுதி ஊர்வலம் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலைமையில் சென்றது. அவருடன் கிட்டத்தட்ட அதே வயதுடைய மாது இருந்தார். அந்த ஆடவர் சின் பெங்கின் மகன் என்று ஊகிக்கப்படுகிறது. ஊர்வலம் தொடங்கியதும் சின் பெங்கின் குடும்பத்தினரும் உறவினர்களும் துக்கத்தால் விம்மி அழுதனர்.

சின் பெங்கிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். மக னின் அடையாளம் மிகக் கடுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இறுதி ஊர்வலத்திற்குப் பின்னர் அந்த ஆடவரை சவாலிட், முன்னாள் தாய் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர்Chin Peng - funeral2 தோங் சாம்ஸ்ரீ மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள் கிட்டி ராத்தாசாயா மற்றும் அகானிட் முவான்சவாட் ஆகியோர் வரவேற்றனர்,

முன்னதாக, பிரதான மண்டபத்தில் சின் பெங்கின் சுமார் 250 தோழர்கள் அமைதியாகத் சிரம் தாழ்த்தி நின்றனர். அவரது பிரியாவிடை கடிதம் பஹசா மலேசியா மற்றும் மாண்டரின் மொழிகளில் லீ டக் ஹீ மற்றும் அனாஸ் அப்துல்லா ஆகியோர் வாசித்த போது புலம்பல் ஒலி கேட்டது.

பின்னணியில் அனைத்துலக சோசலிச கீதம் “த இண்டர்னேசல்” மிக மென்மையாக ஒலித்துக் கொண்டிருக்கையில், லீ அவரது உரையின் போது மிக சிரமப்பட்டு அவரது கண்ணீரை கட்டுப்படுத்த போராட வேண்டியிருந்தது. அதனால் அவரது உரை பலமுறை தடைபட்டது.

 

 

TAGS: