தாய் இராணுவ ஜெனரல்கள்: சின் பெங் நேர்மை மற்றும் மனத்துணிவு ஆகியவற்றின் மோடல்

Chin Peng - funeral - ex Thai PM1மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதிச் சடங்கு இன்று (செப்டெம்பர் 23 )  பேங்கோக்கில் உள்ள ஒரு புத்த கோயிலில் நடந்து முடிந்தது.

அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் கிட்டி ராத்தாசாயா, அகானிட் முவான்சவாட் மற்றும்   பிஸாம் வாட்டானா  வோங்கிரி, “சின் பெங், மியன்மாரின் ஆங் சான்,  இந்தோனேசியாவின் சுகார்ணோ மற்றும் வியட்னாமின் ஹோ சி மின் ஆகியோரின் மலேசிய வடிவம்”, அனைவரும் சுதந்திர போராட்டவாதிகள் என்று கூறினர்.

மலேசிய இராணுவ அதிகாரிகளைப் போலல்லாமல், தென் தாய்லாந்தில் கம்யூனிஸ்ட் கொரில்லா படைகளுக்கு எதிராக தாய்லாந்து இராணுவப் படையினரை வழிநடத்திய இந்த ஜெனரல்கள் சின் பெங்கை ஒரு தந்தையை போன்றவர் என்று வர்ணித்தனர்.ஏ

மேலும், சின் பெங் “நேர்மை மற்றும் மனத்துணிவு” ஆகியவற்றின முன்மாதிரி வடிவம் என்றும் அந்த ஜெனரல்கள் அவர்களுடைய உரைரையில் கூறினர்.

“அவர் எங்களுடைய உள்ளங்களில் ஆழ்ந்து குடிகொண்டிருப்பார்”, என்று பிஸ்ஆம் கூறினார்.Chin Peng - funeral2

மலேசிய உளவுப் படையினர்

இந்த இறுதி சடங்கில் மலேசிய அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், “மலேசிய தூதரகம்” என்ற வாசகம் பொறித்திருந்த சட்டை அணிந்திருந்த ஒருவர் அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்தார். தாம் மலேசிய தூதரகத்தை சேர்ந்தவர் என்றும் தகவலுக்காக படம் பிடிப்பதாகவும் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மலேசிய  உளவுத்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அங்கிருப்பதாக அவர் கூறிக் கொண்டார்.

 

 

TAGS: