ஊழல் கடந்த கால வரலாறாக்கபடும், நஜிப்

Najib in Sanfransiscoமலேசிய பிரதமர் நஜிப் ஊழல் ஒரு கடந்த கால வரலாறு ஆக்கப்படும் என்று சூழுரைத்துள்ளார்.

அமெரிக்கா, சான்பிரான்ஸ்சிஸ்கோவில் காமன்வெல்த் கிளப் லெக்சர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இந்த ஊழல் ஒழிப்பிக்காக ஒரு புதிய ஆளுகை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்காக ஓர் அமைச்சரையே நியமித்திருப்பதாக கூறினார்.

அந்த அமைச்சர் டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசிய பிரிவின் முன்னாள் தலைவர் என்று கூறினார். இங்கு கடுமையான குறைகூறல்களுக்கு ஆளாகியுள்ள அமைச்சர் பால் லவ்வை குறிப்பிட்டு நஜிப் பேசினார்..

ஊழல் ஒழிக்கப்படும் என்று நஜிப்பும் அவருக்கு முன்பு பதிவியில் இருந்தவர்களும் கூறியிருக்கிறார்கள். மகாதிர் கூட அப்படித்தான் கூறினார், கூறிக் கொண்டிருக்கிறார்.

நேர்மைக்கான அமைச்சரின் நியமனம்  நீதிமன்றத்தில்

நஜிப் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பேச்சு உலகம் அறிந்த உண்மை. ஆனாலும், அவர் எந்தக் குற்றச்சாட்டிற்கும் பதில் அளிப்பதில்லை.

குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றமே என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வதாவை. பிரதமர் கேள்வி பதில் என்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டவர் என்பது அவரின் நிலைப்பாடாக இருக்கலாம்.

இருப்பினும், மற்றவர்கள் ஊழல் புரிகிறார்கள். அதனைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

Minister Paul Lowபாரிசான் நாடாளுமன்றகள் அவர்களுடைய சொத்து விபரங்களைத் தயாரித்து பிரதமரிடஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும். பிரதமரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் தமது சொத்து விபரங்களை யாரிடம் தாக்கல் செய்கிறார். சிலர் ரோ…என்று முணுமுணுப்பது கேட்கிறது.

இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இந்த ஊழல் மற்றும் நேர்மை என்ற விவகாரங்களைக் கவனிக்க ஓர் அமைச்சரை நியமித்தார். இச்செயல் அவர் ஊழலை ஒழிக்கவும், நேர்மையை நிலைநிறுத்தவும் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதை காட்டும் என்பது அவரது கணிப்பாக இருக்கலாம்.

இந்த ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மை நிலைநிறுத்தல் ஆகியவற்றுக்கான அமைச்சரின் நியமனமே இப்போது நீதிமன்றத்தின் முன் நிற்கிறது!