டிஎபி மத்திய செயற்குழுவில் ஒரிஜினல் மலாய்க்காரர் இல்லையாம்!

No original malayநேற்று நடைபெற்ற டிஎபி மத்திய செயற்குவிற்கான தேர்தவில் வெற்றி பெற்ற 20 பேரில் ஒருவர் கூட அசல் மலாய்க்காரர் இல்லை என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர் ரஹ்மாட் இஸாஹாக் அங்கலாய்க்கிறார்.

நேற்றைய தேர்தலில் போட்டியிட்ட ஏழு “மலாய் அஸ்லி” கதி என்னவாயிற்று என்று அவர் கேட்டார். வெற்றி பெற்ற ஒருவர் ஸைரில் கிர் ஜொஹாரி.

புக்கிட் பெண்டெரா நாடாளுமன்ற உறுப்பினரான ஸைரில் 1,132 வாக்குகளைப் பெற்று 12 ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால், ஸைரில் பரிசுத்தமான மலாய்க்காரர் இல்லையாம். அவரின் தாயார் ஒரு சீனர் என்று அந்த மலாய் அரசு சார்பற்ற அமைப்பின் தலைவர் ரஹ்மாட் தெளிவுபடுத்தினார்.

அரசமைப்புச் சட்டத்தில் ஒரிஜினல் மலாய்க்காரர் என்று எவரும் குறிப்பிடப்படவில்லை. இன்று வரையில் இந்நாட்டில் பிரதமராக இருந்தவர்களில் எவரும் ஒரிஜினல் மலாய்க்காரர் கிடையாது.

ஒரிஜினல் மலாய்க்காரர் மீது மிகுந்த அக்கறை காட்டும் இந்த ரஹ்மாட், மரினா மகாதிரிடம் போய் ஒரிஜினல் மலாய்க்காரர் யார் என்று கேட்க வேண்டும். செவிக்கு நிறைய கிடைக்கும்!

 

 

 

TAGS: