கர்பால்: அரசியல்வாதிகளுக்கு எதிராக ஐஎஸ்எ பயன்படுத்தப்படாது, அப்போதும் சொன்னார்கள்

karpalஅரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமுதாயத்தினர்ஆகியோருக்கு எதிராகத் தடுப்புக் காவல் பயன்படுத்தப்படாது என்று 1960 ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) இயற்றப்பட்ட போது வாக்குறுதி அளித்திருந்தனர் என்று டிஎபியின் தலைவர் கர்பால் சிங் நினைவு கூர்ந்தார்.

அந்த வாக்குறுதியை அளித்தவர் அப்துல் ரசாக் ஹுசேன், அப்போதைய துணைப் பிரதமர், இன்றைய பிரதமரின் தந்தை. அரசியல்வாதிகளுக்கு எதிராக அச்சட்டம் பயன்படுத்தப்படாது என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததை கர்பால் சுட்டிக் காட்டினார்.

இப்போது உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி பிசிஎ அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்று கூறுகிறார். ஆனால், கொண்டு வரப்படும் சட்டம் அரசியல்வாதிகளையும் உள்ளடக்கியதாகும் என்று கர்பால் கருதுகிறார்.

அப்துல் ரசாக் ஹுசேன் அளித்த வாக்குறுதிக்கு முரணாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கர்பாலும் ஒருவர்.

எப்படியோ பிசிஎ சட்டத் திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டு விடும். என்ன நடக்கப் போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றாரவர்.

நம்பிக்கை துரோகம் புரிவதில் அப்பனையும் மிஞ்சியவரான இன்றைய பிரதமர் நஜிப் ரசாக் என்ன செய்வார் என்று கர்பாலுக்கு தெரியாதா, என்ன?

TAGS: