ஐஜிபி: துப்பாக்கிகள் கடலில் விழுந்திருக்கலாம்

1 igpகாணாமல் போனதாகக் கூறப்படும் போலீஸ்  துப்பாக்கிகள் ஒரு வேளை படகுகளிலிருந்து தவறிக் கடலில் விழுந்திருக்கலாம் எனப் புதிதாக ஒரு அனுமானத்தை வெளியிட்டிருக்கிறார்  இன்ஸ்பெக்டர் அப் போலீஸ் காலிட் அபு பக்கார்.

“காணாமல் போன 37 துப்பாக்கிகளில் எதுவும் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டதற்கு இதுவரை ஆதாரம் இல்லை.

“காணாமல் போன துப்பாக்கிகள் குற்றவாளிகளிடம் சிக்கி இருக்க மாட்டா. ஒரு வேளை படகுகளிலிருந்து கடலில் விழுந்திருக்கலாம்”, என்றாரவர்.

காலிட் காணாமல் போன துப்பாக்கிகள் 37 என்கிறார். ஆனால், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை 44 என்கிறது.

வெட்கம், கடமை உணர்வு அற்ற ஒரு போலீஸ் அதிகாரி இவர் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டியதில்லை. முதலில், யார் சொல்வது பொய்?பதில்

தலைமைக் கணக்காய்வாளர் 44 துப்பாக்கிகள் காணவில்லை என்று கூறுகிறார். இவர் 37தான் என்கிறார். இதில் யார் சொல்வது உண்மை என்று பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அடுத்து, 37 துப்பாக்கிகள் ஏன் காணாமல் போயின? அவை கடலில் விழுந்திருக்கலாம் என்று ஜோசியம் கூற இவர் என்ன ஜோசியக்காரரா?

இவரும் இவரது படையினரும் எதையும் துல்லியமாக விசாரித்து, ஐயத்திற்கு இடமின்றி செயல்படும் வீரர்களாயிற்றே. இதற்கு  விசாரணை நடத்தி மக்களுக்கு பதில் கூற வேண்டும்.

அதற்கும் மேலாக, உள்துறை அமைச்சர் இதற்கு பதில் கூற வேண்டும். சுடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றுக்கும் காணாமல் போன 44 துப்பாக்கிகளுக்கும் தொடர்பு உண்டா என்பதை அவர் கூற வேண்டும்.