கணக்கறிக்கை: ஆர்ஓஎஸ் கடமையைச் சரிவரச் செய்யவில்லை

1 audடிஏபி விவகாரத்தில் சங்கப் பதிவதிகம்(ஆர்ஓஎஸ்) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அறிவோம். ஆனால், ஆர்ஓஎஸ் அதன் கடமையைச் சரிவரச் செய்வதில்லை என்று கூறுகிறது தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை.

புத்ரா ஜெயா, பினாங்கு, ஜோகூர், பகாங் ஆகிய இடங்களில் உள்ள கோப்புகளை ஆராய்ந்ததில், 90 சங்கங்கள் அவற்றின் ஆண்டு அறிக்கைகளை ஆர்ஓஎஸ்ஸுக்கு அனுப்பவில்லை எனத் தெரியவருகிறது ஆனால், அவற்றுக்கு எதிராக எந்த அறிவிக்கையும் அனுப்பப்படவில்லை என அது கூறிற்று.

ஏன் அந்த அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? அந்த அமைப்புகள் அவருக்கும் அவரது அமைச்சருக்கும் அவர்களில் அரசுக்கும் வேண்டியவர்களாக இருக்கலாம். அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற கடப்பாடு அடகு வைக்கப்பட்டு விட்டது.  ஆளுங்கட்சிக்கு அரசாங்க ஊழியர்கள் எடுபிடிக்காரர்களாகி விட்டனர்.