ஹரி பெலியா 2012 கொண்டாட்டத்தின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கே-போப் கலை நிகழ்ச்சிக்கு அரசாங்கம் பணம் கொடுத்ததை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டார்.
அந்நிகழ்ச்சி தனியார் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், தேசிய கணக்காய்வாளர் அறிக்கை 2012 மூன்று கே-போப் குழுவினர்களுக்கு அந்த அமைச்சு ரிம1.6 மில்லியன் செலவிட்டதாக கூறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு அரசாங்கப் பணம் செலவிடப்பட்டது என்பதை அமைச்சு அதிகாரிகள் மறுத்திருந்தனர். தொடக்கத்தில், தனிப்பட்டவர்களின் ஏற்பாதரவு இருந்ததாகவும் ஆனால் அது நிலைநிறுத்தப்படவில்லை என்று கைரி இப்போது கூறுகிறார்.
இந்நிகழ்ச்சி நடைபெற்ற போது அமைச்சராக இருந்தவர் அஹமட் ஷபெரி சிக்.
இந்த ஹரி பெலியா 2012 நிகழ்ச்சி சம்பந்தமாக தேசிய கணக்காய்வாளர் பல்வேறு குளறுபடிகளை அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஒரு பில்லுக்கு இரு முறை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. வேலை நிமித்தமாக மேற்கொள்ளப்பட்ட உல்லாசப் பயணங்கள் பலவற்றுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
தாம் இவ்வாண்டில்தான் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் இதனைக் கடுமையானதாக கருதுவதாக கைரி கூறினார்.
இது குறித்து அவரது அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்கும் என்றாரவர்.
அமைச்சர்கள் கொடுக்கும் எத்தனையோ உறுதிமொழிகளில் இதுவும் ஒன்று.
ஆடிட்டர் ஜெனரலும் ஆண்டாண்டாக அழுது கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
அதற்கு அடுத்த ஆண்டிலும் அதே அறிக்கை. அதே அழுகை. அதே வாக்குறுதிகள். அடுத்து வரும் 2013 அறிக்கையிலும் மக்கள் பணம் மில்லியன் கணக்கில் சூறையாடப்படும் தகவல் நிச்சயம் இடம் பெறும். இது நமது நாட்டு அரசாங்கத் தலைவர்களின் பாரம்பரியம்.
இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இந்த ஆபாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து மக்கள் பணம் ரிம1.6 மில்லியனை வாரி வழங்கிய அமைச்சர் அஹமட் ஷபெரி சிக் இதற்கு பொறுப்பேற்று பதவி துறக்க வேண்டும். அதனைச் செய்வதற்கு கைரி முன்வருவாரா?
இது போன்ற செலவுகளை பற்றி கேட்டால் , இசா சட்டம் பாயும் என்பார்கள் ! அறையும் குறையுமாக ஆட்டம் போட ரம் 1.6 மில்லியன் ? அவனோட அப்பன் பணமா ,வருத்தப்பட ? ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள் ஆனால் தண்டனை கிடையாது , அது ஏன்”????
ரிம1.6 மில்லியனை அஹமட் ஷபெரி சிக் திருடினான் கைரி ரிம2.6 மில்லியனை திருடுவான்.போரிதிருந்து பாப்போம்.
இப்பொழுது umno அரசியல் மக்கள் பணத்தை திருடி தின்று ஏப்பம்
விடும் திருடர்கள் தானே ,தனி அறையில் உட்கார்ந்து ரசித்து
பார்பான்கள் .
வணக்கம். இளையர் அமைப்புகளுக்கு வருடத்திற்கு ரிம3000 கொடுக்க பணம் இல்லை. இதற்கு மட்டும் பணம் இருக்கிறது.
இத்தகைய ரகசிய விசயங்களை வேறு யாராவது வெளிப்படுத்தி இருந்தால் ரகசிய பாதுகாப்பு சட்டம் அதன் கடமையை செய்து இருக்கும்….
காசு துட்டு பணம் மனி மனி – நல்லவாயன் சம்பாரிசத ( சீனர் -இந்தியர் ) நாறவாயன் ( அம்னோ ) தின்னுறான்! இது உண்மையிலும் உண்மைதானே ??
நாட்டின் வரவு எல்லாம் இவன்களின் வங்கியில் தான் — யார் யாரை கேட்கமுடியும்? தானே ராஜா தானே மந்திரி—