சபாய் சட்ட மன்றம் மஇகா-வின் கையில் இருந்த காலத்தில் தீபாவளி காலங்களில் இந்தியர்களுக்கு பணம் கிடைத்து வந்தது. ஆனால் அது இந்த வருடம் வராது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தேசிய முன்னணிக்கு வாக்களித்த சுமார் 4,000 இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என்கிறார் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ.
12 தேர்தல்களில் சபாய் சட்டமன்றம் தேமு-யிடம் இருந்த்து. 13 வது பொது தேர்தலில் பல போராட்டங்களுக்கு பிறகு மக்கள் கூட்டணி அதை வென்றது.
பஹாங் மாநில முதல்வரிடம் இரண்டு மஇகா தலைவர்கள் சென்று இந்த முறை காராக் தமிழர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்று வேட்டு வைத்துள்ளதாக தெரிகிறது என்கிறார் காமாட்சி.
“இதை விடக் கேடு கெட்ட செயல் வேறு யாராளும் செய்ய முடியாது. மசிச-மிக மோசமாக தோல்வி கண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் இனத்தைக் காட்டி கொடுக்கும் கேவலமான செயலை செய்வதில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும் இதை செய்வது கேவலத்திலும் கேவலம். சபாயில் மக்கள் கூட்டணி வென்றதுக்கு ஒட்டு மொத்த தமிழர்களை அதுவும் வறுமை நிலையில் இருக்கும் பாமர மக்கள் தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்?”
மஇகா வேட்பாளருக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாக்குகள் கிடைத்தது, அதை போட்டவர்கள் யார்? அரசாங்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்காமல் நன்கு படித்து வசதியாக இருக்கும் தமிழர்கள் அதிகமாக மக்கள் கூட்டணியை தேர்ந்தெடுத்தனர். ஆனால் வறுமையில் வாடுபவர்களும் வயதானவர்களும்தான் மஇகா- வினரின் மிரட்டள்களுக்கும் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்கும் பணிந்து தேமு-க்கு வாக்களிதுள்ளனர்.
“தீபாவளி அன்பளிப்பு பணம் கொடுக்க வேண்டாம் என்று குத்தி கொடுத்த நீங்கள் அடித்திருப்பது காலகாலமாக உங்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஏழை தமிழர்கள் வயிற்றில் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்” என்கிறார் காமாட்சி.
உங்கள் பாட்டன் முப்பாட்டன் உழைத்து சம்பாதித்து வைத்த சொத்திலிருந்தா தீபாவளி அன்பளிப்பு தர போகிறார்கள்? மக்கள் வேர்வையை சிந்தி உழைத்த பணத்தில் அரசாங்கத்திற்கு செலுத்திய வரி பணத்திலிருந்த்து தானே கிள்ளி கொடுக்கிறார்கள்? அதையும் வெண்டாம் என்று தடை செய்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். உங்கள் மிரட்டல்களை எல்லாம் தூக்கி எரித்துவிட்டு பாமர மக்கள் நல்ல பாடம் சொல்லப் போகும் காலம் விரைவில்வரும் என்கிறார் காமாட்சி.
இது சார்பாக மஇகா தலைமையகம் தலையிட வேண்டும் என்கிறார் காமாட்சி.
rendu perum yarunnu peyar sollunga… appothan nalla ketkalam.
தாயே உங்களுக்கும் காரக் மக்களுக்கும் முன்னாள் YB க்கு ஒரு செல்ல
பெயர் உண்டு YB mayat என்று இவன் ஒரு சுய நல வாதி .
கொள்ளை அடிப்பது, நிலக்கடத்தல் செய்வது , சாதியையின் பேரால் சதிசெய்வது, தூண்டிவிட்டு வேடிக்கைப்பாற்பது, அடுத்தவன் சோற்றில் மண்ணை போடுவது இதுவெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை. அவர்களுடைய அரசியல் நாகரீகம், கற்றுகொடுத்த ஆசானும் அப்படிதானே இருந்தார். கேவலம் , அசிங்கம் , மானக்கேடு இதுதெரிந்தால் தானே இவர்களுக்கு ? ஏழையின் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்!! சாத்தானின் முகவரியைவிட்டு வெளியே வாருங்கள் !!
ம இ கா காரன் புத்தி இப்படிதான் போகும் ! நீங்கள் விட்டு விடுங்கள் ,மக்கள் ம இ காவை கழட்டி விடுவார்கள் ! yb காமாச்சி இந்த மக்களுக்கு ஏதாவது செய்யலாமே ?
ம இ கா பழனிவேலு /சுப்பிரமணி/மூன்று உ தலைவர்கள் இது பற்றி என்ன சொல்வார்கள் என்றால்,, ம இ கா தேசிய தேர்தல் வருது 4000 வாக்களர்கள் வீணா போகட்டும் என்பார்கள்.தீபாவளி நானா கொண்டாட சொன்னேன் என்பான் தோத்து போன முட்டாள்.ம இ காவால் பஹாங் மாநில தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடு. நாட்டு பிரதமர் மாநிலம் இன்னும் நாம் பிச்சை எடுக்கிறோம்.நம்பிக்கை உடைந்த கை எம்பி ஆபீசில் முற்றுகை போராட்டம் நடத்துங்கள். அவன் ஆபீசில் துக்க நாள் கொண்டாடுங்கள்.
காமாட்சி அவர்களே அரசியலில் , நீங்கள் மாறுபடுங்கள். நீங்களே ஏழை மக்களின் நிலையை விளக்கி ,முதல்வரிடம் மனு கொடுங்கள் . முதல்வர் என்பவர் மாநிலத்தில் அனைவருக்கும் சொந்தமானவர் . பாராபட்சம் கூடாதவர் என்பதை அவருக்கு உணர்த்துங்கள் . ம .இ கா. மல்லாந்து படுத்து வானத்தை பார்த்து கொண்டிருக்கட்டும் . அவர்கள் ஆதாயம் இருந்தால்தான் ஆற்றை கட்டி இறைப்பார்கள் .
அரிசிக்கும் சார்டினுக்கும் ஆசைப்பட்டு அலைந்த கூட்டம் இன்று அவஸ்தைபடுகிறது, பாரிசானை இன்னும் எத்தனை காலம் நம்பி நம்பி வாக்களிக்க போகிறீர். மஇகா காரனுங்களை திட்டி திட்டி அலுத்துவிட்டது, மஇகா தலைவர்கள் திருந்தாத ஜடங்கள். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
போட்டுக் கொடுப்பதில் ம.இ.கா. காரனை விட்டால் வேறு ஆளே கிடைக்காது. யார் கண்டார். ஏழைகளுக்குக் கிடைக்கும் அந்தப் பணத்த இவர்களே பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆப்பு மக்களுக்குத்தான்! ம.இ.கா. காரனுக்கு அல்ல!
ம.இ.கா. காரனும், அம்நோகாரனும் இந்திய ஏழைகளுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. நீங்கள் உங்களின் ஒரு மாத ஊதியமும் இன்னும் பொது மக்கள் நன்கொடையைப் பெற்று ஏழை எளியவர்களுக்கு தீபாவளி நன்கொடை கொடுத்து உதவுங்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருகின்றார்கள். நிச்சயம் அடுத்த பொது தேர்தலில் ம.இ.கா – வுக்கு கிடைத்த ஓட்டும் இல்லாமல் போவும்.
எவன் உதவியும் வேண்டாம். அடுத்தவன் கையை எதிர்ப்பார்க்கும் நிலை மாறவேண்டும். இருப்பதைக் கொண்டு கொண்டாடுவோம். நமக்குள் உதவிக் கொள்வோம். எந்த அரசியலும் கொள்கையும் தேவை இல்லை.
அட நீங்க வேறே …. எப்போதும் போல மக்கள் பெயரை சொல்லி UMNO விடம் பணம் வாங்கி தங்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டடி விடுவார்கள் MIC காரர்கள். எங்கள் ஊரில் உள்ள ஒரு MIC தறுதலை தலைவன் இதைதான் பல வருசமாக செய்து வருகிறான். இந்த லெட்சணத்தில் இவனுக்கு வருசத்துக்கு ஒரு பட்டம். இதை பழனிதான் கவனிக்க வேண்டும்.
சிலாங்கூரில் பக்கத்தான்தான் ஆட்சி செய்து வருகிறது. இங்கு மட்டும் இந்தியர்களுக்கு எதை அள்ளிக் கொடுத்து விட்டார்கள். ஹரி ராயா சமயத்தில் ஒரு மாத காலத்திற்கு விருந்து, ஏழைகளுக்கு உதவி, அன்பளிப்பு,, அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ், 100 வெள்ளி அங்பாவ் என மாநில அரசு மலாய்க்கார்களுக்கு அள்ளித் தந்தது சிலாங்கூர் அரசு. இப்போது ஹரி ராயா ஹாஜியை முன்னிட்டு தடபுடலாக விருந்து நிகழ்வுகளுக்கு ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் தீபாவளிக்கு இன்னும் மூன்றே வாரங்கள் உள்ளன. இந்தியர்களுக்கு உதவுவதற்கான ஒரு திட்டத்தையும் மாநில பக்கத்தான் அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதை யாரிடம் போய் சொல்லி அழுவது.
வணக்கம் கருத்துகளுக்கு நன்றி. தீபாவளிக்கு காராக் மக்களுக்கு குறந்தப்பட்சம் ஒரு விருந்து உபசரிப்பு செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த நிகழ்வு 20/10/2013 இல் காராக் நகரில் நடைபெறும். இதற்கான டிக்கெட்டுகளை வீடு வீடாக சென்று விற்று வருகிறேன். நம்மவர்கள் அதிகமாக ஈடுபாடு காட்டவில்லை. சீனர்கள் ஓரளவுக்கு வாங்குகிறார்கள். ரி ம 30 மற்றும் 50 விலைகளில் டிக்கெட்டுகள் உள்ளன. இன்னும் 8 நாட்களே உள்ள்ன. பரப்பரப்பாகவேலைகள் நடந்தாலும் விற்பனை மகிழ்சி தரும் வகயில் இல்லை. முயற்சியை கை விட வில்லை. எப்படியும் தீபாவளி உபசரிப்பு உண்டு. ஆனால் பண முடிப்பு இல்லை
அந்த 4,000 ஆயிரம் பேருக்கு உங்க கட்சியின் சார்பாக ஏதும் செய்யுங்க? அடுத்த தேர்தலில் எந்த அப்பன் சுப்பன் நின்னாலும் உங்களை வெல்ல முடியாதே?
சகோதரி அவர்களே, முதலில் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அவன் தடுத்தான், இவன் போட்டு விட்டான், பின்னால் குத்தி விட்டான் என்பன போன்ற அரசியல் முடிச்சுக்கள் போட வேண்டாம். மக்கள் ம. இ. கா. வை முழுமையாக ஓரங்கட்ட (மறந்தும் நினைவில் கொள்ளாமல் இருப்பதற்கு) மக்கள் சேவையில் உங்களை முழுமையாக ஈடுபடுத்துங்கள். எந்நேரமும் தங்களுக்கென்று ஒரு கூட்டத்தோடு திரியும் அரசியல் கலாச்சாரம் தானாகவே
அச்சாணியற்று காணாமல் போய்விடும். அரசியல் என்பது மக்கள் சேவைக்கே என்பதை அவர்களும் கற்றுக் கொள்ளட்டும். தொடரட்டும் உங்கள் மக்கள் நற்பணி. நன்றி.
வணக்கம்
பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மாற்று நடவடிக்கைகளை எடுங்கள்
தீவாளி !!!!!!!!!!!!!!! சொந்த பாட்டன் அநியாயமாக பார்பன சதியால்கொல்லபட்டதை கொண்டாடும் முட்டாள் தமிழா உனக்கு புத்தி இலாயாடா !!! திருக்குறளிலோ நமது சங்க இலக்கியங்களில் இருக்கிறதா தீவாளி (கருப்பானவர்கள் அசுரர்கள் ..) கருப்புதமிழனுக்கு வெட்கம் வெட்கம் இல்லையா ….???
காமாட்சி உனக்கு கிடைத்த ஆட்சியை வைத்து நம்மவர்களுக்கு
சேவை செய் , உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ,உன் சொற்பொழிவை கேட்டு பாரதியார் கண்ட பெண்ணை நான் கண்டுக்கொண்டதாக திருப்தி அடைந்தேன் , நீயும் மற்ற அரசியல்
கட்சியினரை போல குறை சொல்லாதே , சரிதானே நைனாச்சி .
அன்பு சகோதரி காமாட்சிக்கு! நேற்று உங்கள் காராக் நகருக்கு சென்றிருந்தேன். “பணமிருந்தால்தான் தொகுதிமக்களுக்கு சேவை செய்ய இயலும், என்பது காமாட்சியின் நினைப்பு. தேர்தலுக்கு முன்பே எங்களுக்கு இது தெரிந்திருந்தால்,கண்டிப்பாக இந்த பொம்பளைக்கு ஒட்டு போட்டிருக்க மாட்டோம். நாங்கள் என்ன பணமா கேட்டோம்?” இப்படி கூறுவது நானல்ல. அங்குள்ள மக்கள். “தமிழச்சி” என்கிற இணைச்சொல்லை தயவு செய்து நீக்கிவிடுங்கள். உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. நீங்கள் தமிழர் அல்ல என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்! அரசியல் ஆதாயத்துக்காக ஏன் இந்த போலி ‘தமிழச்சி’ வேடம்? உங்களது விருந்து பதாகையில் எட்டு பேர் சீனர்களின் படங்களை போட்டுள்ளீர்கள். உங்கள் மாநில அமைப்பு செயலாளர் [தமிழர்] செல்வராசுவின் படத்தை போட்டிருக்களாமே? அதைவிடுங்கள், நாடே அறிந்த ஜ,சே,க.வின் நீண்ட நாளைய போராட்டவாதியான, உங்கள் மாநில துணைத்தலைவர் அப்பளசாமி[சிம்மாதிரி] படத்தை போட்டு உங்களது போலியான “தமிழச்சி” பெயரையாவது காப்பாற்றி இருக்கலாம்.
அய்யா சிங்கம் உங்கள் கருத்து மிக அசிங்கம்,தமிழச்சி சகோதரி காமாச்சியை சிறுமைப்படுத்துவதில்,மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்பது உங்கள் கருத்தில் இருந்து புரிகிறது! பேரிலேயே தமிழச்சி தொக்கிநிக்குதே! பணமில்லாமல்,தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செயித தொகுதி மக்களுக்கு சேவை செய்ய,உங்களிடம் உள்ள அலாவுதீன் அற்ப்புத விளக்கை தமிழச்சி காமாச்சிக்கு கொடுத்து உதவலாமே! கேமரன் மலையில் பழனிவேல் வெற்றி பெற்றது பண பலம்,படை பலம் என்ற தங்களின் கூற்று பொய்யா?சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் அய்யா டாக்டர் ஜெயக்குமார் தொகுதி மேம்பாட்டுக்கு பணம் கேட்டு வழக்கு தொடுத்தாரே? அப்பளசாமி படத்தை போட்டிருந்தால் தமிழச்சியாக ஏற்று கொண்டிருப்பிர்களா ?
தமிழ் மொழியின் கருத்துக்கு மிக்க நன்றி!