கத்தோலிக்க வார இதழான த ஹெரால்ட்-இல், இறைவனைக் குறிப்பிட ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுத்தத் தடை விதித்த முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பைப் பலரும் குறைகூறியுள்ளனர்.
வழக்குரைஞரான ஷியாரெட்ஸான் ஜொஹான், அரசமைப்பைக் காப்பதாக எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்த நீதிபதிகள் நீதிபதியாக இருக்கக்கூடாது என்றார்.
“நீதிபதிகள் அரசமைப்பைக் காக்க அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதைச் செய்ய முடியாதவர்கள் நீதிபதியாக இருக்கக் கூடாது”, என ஷியாரெட்ஸான் டிவிட்டரில் கூறி இருந்தார்.
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமும் காட்டமாகக் கருத்துரைத்தார்.
“நீதிபதிகள் சட்டப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். ஆனால், மலேசியாவில் தொடர்பற்ற பல வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது.
“இங்குள்ள முஸ்லிம் நீதிபதிகள் கிறிஸ்துவ சமயத்திலும் வல்லுனர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சிறிதுகாலம் ‘வேடிக்கனில்’தங்கி இருந்தவர்கள் போலும்”, என்று டிவிட்டரில் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
100% அரசியல் தீர்ப்பு. இங்கு அரசியலமைப்பு சட்டமோ நீதியோ நிலைநாட்டப் பட்டதாக தெரியவில்லை. எல்லாம் ஒரே அம்னோ மயம். இதை அந்த அல்ல்லாஹ் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.
இயேசு இறைவன்.கிறிஸ்துவர்கள் பொறுமை காக்க வேண்டும்.நாமனைவரையும் தொடர்ந்து நீசிப்போம்..வன்முறை நம் இயேசு வழி இல்லை. .
இவர்கள இப்படி எல்லாம் செய்தால் இன்னும் அதிகமான மலாய்காரர்கள் கிருஸ்தவ மதத்தில் சேர வாய்ப்புள்ளது.. ஏற்கனவே இவர்களின் வாழ்கை முறை, உணவு முறை, உடுத்தும் முறை, கிறிஸ்தவர்கள் போல்தான் உள்ளது.. சிகரட் பிடிக்கும் மலாய் பெண்கள் அதிகரித்து varugindranar.
சமயம் அவரவர் மதத்திற்கு எற்றபடி எல்லா மதத்திலம் உள்ளது. நம் நாடடில் இது சற்று திவிரமாக உள்ளது. பூமி, சந்திரன் சூரியன், கடல் எல்லாம் ஒன்றுதான். வேறுபாடில்லை. மனிதன் மட்டும் ஏன் மதத்தில் வேறு பட்டு நிற்கிறான். இறப்பு ஒன்றுதான். அனால் மதத்தில் மட்டும் வேறுபாடு. கிறுக்கு பிடித்த. மனிதர்கள்.
‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தது ஒருபுறமிருக்க, அத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிளின் தரம்தான் பெருங்கேள்விக்குரியது!