இப்ராகிம் அலி: ‘அல்லாஹ்’ தீர்ப்பு அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டது

1 ibrahimமுறையீட்டு நீதிமன்றம்,  கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்டில்  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தானது  அரசமைப்பு,  சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்  செய்யப்பட்ட ஒரு முடிவாகும்  என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.

இந்நாட்டில் மற்ற சமயத்தவர் தேவாலயங்கள், கோயில்கள் போன்றவற்றுக்குச் சென்று வழிபடுவதற்கோ அவர்களின் சமய விழாக்களைக் கொண்டாடவோ தடையில்லை,

“நாம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கிறோம். ஆனால், அந்த முடிவு சட்டம் மற்றும் அரசமைப்பின் அடிப்படையில் செய்யப்பட்டது”, என்றாரவர்.

கிறிஸ்துவர்கள்  ‘அல்லாஹ்’ என்பதற்குப் பதிலாக “துஹான்” என்னும் பகாசா மலேசியா சொல்லைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் சொன்னார்.

ஆனால், கிறிஸ்துவர்கள் இறைவனை ‘அல்லாஹ்’ என்று கூறுவது உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது தாம் மலேசியாவைப்  பற்றி மட்டுமே  பேசுவதாக இப்ராகிம் அலி குறிப்பிட்டார்.