ஜாகார்த்தா போஸ்ட் ஆசிரியர்: இறைவன்மீது யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை

endyஇறைவன் ஒருவனே என நம்பும் எவரும் முஸ்லிம்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும்  கிறிஸ்துவர்களுக்கு ஒரு இறைவன் இருப்பதாகவும் கூற முடியாது.   ‘அல்லாஹ்’  என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது  என  மலேசிய முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்வினையாற்றியுள்ள  இந்தோனேசிய நாளேடான  ஜகார்த்தா போஸ்ட்-இன் ஆசிரியர்  இவ்வாறு கூறினார்.

வெவ்வேறு சமயத்தவருக்கு  வெவ்வேறு தெய்வங்கள் என்பது பல கடவுள் வழிபாட்டை முன்னிறுத்தும் பல்லிறைவாதமாகும் என்று எண்டி எம்.பயுனி கருத்துத் தெரிவித்தார்.

“ஏக இறைவன் என்று நம்பும் எவரும் அந்த இறைவன் தமக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியாது.

“அப்படி உரிமை கொண்டாடுவோர் தங்களை அறியாமலேயே தங்கள் நம்பிக்கைக்குக் குழி பறித்துக்கொள்கிறார்கள்”, என அவர் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: