செர்டாங் மருத்துவமனை கூரை மீண்டும் இடிந்து விழுந்தால் அமைச்சர் பதவி விலக வேண்டும்

1 hospitalசெர்டாங் மருத்துவமனையில் நான்காவது தடவையாகக் கூரை இடிந்து விழுந்தால் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் பதவி விலக வேண்டும் என கூலாய் எம்பி தியோ நை ச்சிங் கோரியுள்ளார்.

ஏற்கனவே, கூரை இடிந்துவிழுந்த சம்பவங்களின்போது, அவற்றுக்காக காரணங்கள் ஆராயப்பட்டு மீண்டும் அவ்வாறு நிகழாதிருக்க அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் உறுதி கூறி இருந்தார்.

1 teoஆனாலும், முன்றாவது தடவையாக 2013 செப்டம்பர் 30-இல் கூரை மீண்டும் இடிந்து விழுந்தது என தியோ கூறினார்.

அது மீண்டும் நிகழ்வதைத் தவிர்ப்பதில்லியோ தியோங் லாயைவிட தாம் உறுதியுடன் இருப்பதை டாக்டர் சுப்ரமணியம் நிரூபிக்க வேண்டும்

“எனவே, அவருக்கு ஒரு சவால் விடுக்கிறேன். நான்காவது தடவையாக கூரை இடிந்து விழுந்தால் பதவி விலக உறுதிகூறி அவர் கையொப்பம் இட வேண்டும். சவாலை ஏற்க அமைச்சர் தயரா?”, என தியோ அறிக்கை ஒன்றில் வினவினார்.