லிம்: நஜிப்பின் மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கியது

1-kitநாட்டில் இரண்டுவகை சட்டம் என்பதை அமைச்சரவை நிலைநாட்டியதை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருந்த மிதவாதத் தோற்றம் உடைந்து நொறுங்கிப் போயிற்று என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

அரசாங்கம் வலச்சாரி தரப்புகளின் நெருக்குதலுக்குப் பணிந்து ‘அல்லாஹ்’ என்னும் சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்காடி வெற்றியும் பெற்று இப்போது அத்தடைவிதிப்பு தீவகற்பத்துக்கு மட்டும்தான் கிழக்கு மலேசியாவுக்கு அல்ல என்று கூறுவதைச் சுட்டிக்காட்டிய லிம், அதை “2மலேசியா கொள்கை” என வருணித்தார்.

“நஜிப்பின் 1மலேசியா கொள்கை,  நான்கு ஆண்டுகளில் அரசமைப்பு வழங்கும் சமய சுதந்திரத்துக்கு மலேசியாவின் இரண்டு பகுதிகளுக்கும் வெவ்வேறு விளக்கமளிக்கும்  2மலேசியா கொள்கையாக சீர்கெட்டுப் போய்விட்டதா?”, என லிம் வினவினார்.