என் மகன் ஆசிபெற்ற வேட்பாளர் அல்லவே: மகாதிர் அங்கலாய்ப்பு

1 mahaஅம்னோ பேராளர்கள் நாளைதான் வாக்களிப்பார்கள்.  ஆனாலும்  அக்கட்சியின் முன்னாள் தலைவர்  டாக்டர் மகாதிர், உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  ஆறு வேட்பாளர்களில்  ஒருவராகிய தம் புதல்வர் முகிரிஸ் வெற்றிபெற மாட்டார் என்பது தமக்கு இன்றே தெரிந்து விட்டது  எனக் கூறிக்கொள்கிறார்.

“அம்னோவில், தலைவர்  யாரை விரும்புகிறாரோ அவர்களைத்தான் பேராளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். என் காலத்திலும் என்னை எதிர்த்தவர்கள் வெற்றிபெற முடியாது என்ற நிலைதான்…….

“முக்ரிஸின் வாய்ப்பு 50க்கு50-தான். அல்லது 50 விழுக்காட்டுக்கும் குறைவாகக்கூட இருக்கலாம்…..அவர் ஆசிபெற்ற வேட்பாளர் அல்ல…மக்களும் மாற்றத்தை விரும்புவதில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, மலாய் வர்த்தகச் சங்க நிகழ்வு ஒன்றில் பேசிய மகாதிர், அம்னோ தேர்தலில் பணம் விளையாடுவதாகக் குறிப்பிட்டார்.

“ஊழல் பரவலாக உள்ளது. நிறைய பணம் செலவிடப்படுகிறது.

“பணம் செலவிடவில்லை என்றால், தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள்”, என்று கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.