மகாதிர்: கடமை தவறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

2012ஆம் ஆண்டு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை,  அரசாங்கத்தின் திறமைக்குறைவையும்  நிர்வாகச் சீர்கேடுகளையும்  அம்பலப்படுத்தி இருப்பதால்  சம்பந்தப்பட்ட  அமைச்சர்கள்  அவற்றுக்குப்  பொறுப்பேற்று  பதவி விலக வேண்டும் என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர் முகம்மட் விரும்புகிறார். “ஜப்பானில் விமான நிலையத்தில் ஒரு விமானம் விழுந்துவிட்டால் போக்குவரத்து அமைச்சர் பதவி  விலகுவார்.…

மகாதிர்: BEE பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகைசெய்யும் திட்டம் அல்ல

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிமுகம் செய்துவைத்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்ட(BEE)த்தை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் தற்காத்துப் பேசியுள்ளார். “அது பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகை காட்டும் ஒரு திட்டமல்ல. பொருளாதார வளம் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது அத்திட்டம்”. இன்று, கோலாலும்பூரில்…

காடிர்: அன்வாரை ‘ஒழித்துக்கட்டும்படி’ என்எஸ்டி-க்கு உத்தரவிட்டார் மகாதிர்

டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது 1998-இல், அன்வார் பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரை “அடியோடு ஒழித்துக்கட்டும்படி” நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்கு உத்தரவிட்டாராம். அந்நாளேட்டின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியரான ஏ.காடிர் ஜாசின் இத்தகவலைத் தெரிவித்தார். ஆனால், அந்நாளேடு அதற்கு முந்திய 16 ஆண்டுகளாக மகாதிருக்குப்பின் பிரதமர் பதவி…

மகாதீர்: சிறந்த மலேசியாவுக்கு சுதந்திரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்

சிறந்த மலேசியாவை நிர்மாணிக்க வேண்டுமானால் மலேசியர்கள் குறைவான  சுதந்திரங்களுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என டாக்டர் மகாதீர் முகமட்  கூறுகிறார். "நாம் நமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நம்மைக் கட்டுப்படுத்திக்  கொள்ள வேண்டும். சுய கட்டுப்பாடு அவசியமாகும்," என அவர் இன்று  கோலாலம்பூரில் சொன்னார். அதிகமான…

மகாதிர்: எதிர்தரப்பிடம் அரசாங்கம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நாட்டின் ஜனநாயக முறையை இழிவுபடுத்தி வரும் மாற்றரசுக் கட்சியினரிடம் அரசாங்கம் அனுசரணையாக நடந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறார். “கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்கக்கூடாது”. நேற்று கோலாலும்பூரில் லங்காவி அனைத்துலகக் கலந்துரையாடல் (எல்ஐடி) தொடர்பில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம்…

டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்

சீன வாக்காளர்களுக்கு எதிராக அண்மையில் 'நேர்மையற்ற தாக்குதலை' தொடுத்துள்ள டாக்டர் மகாதீர்  முகமட்டுக்கு எதிராக அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இன்று ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. அலோர் ஸ்டார் எம்பி கூய் சியாவ் லியூங்-கும் அவரது ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர். அந்த முன்னாள் பிரதமருடைய "முற்றிலும் நியாயமற்ற…

மகாதிர்: தேர்தலில் ‘சீன இனவாதம்’ இருந்ததற்குப் பேரணிகளே சான்று

பொதுத் தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள்கூட்டமே  பொதுத் தேர்தலில் “சீன இனவாதம்”  இருந்ததற்கு தக்க சான்றாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட். பேரணிகளில் “கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் சீனர்கள்”தான் என்றும் பேரணிகள் “பெரும்பாலும் சீனர் சம்பந்தப்பட்டவைதாம்”என்றும் வலைப்பதிவு ஒன்றில் மகாதிர் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக…

மகாதிர்: மக்களுக்கு வேறு வழி இல்லாததால் அம்னோ வென்றது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்களுக்கு வேறு வழியில்லை அதனால்தான் அம்னோ வென்றது என்று கூறியிருப்பது பொதுத் தேர்தல் வெற்றியால் அம்னோ அடைந்த உற்சாகத்தை அப்படியே குன்றி போக வைத்துள்ளது. “13வது பொதுத் தேர்தலில் அம்னோதான் கூடுதல் இடங்களை வென்ற கட்சி என்று நாம் பாராட்டி மகிழலாம்.…

மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியா அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது?

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பக்காத்தான் ரக்யாட் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பேரணிகளைச் சாடிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், போகும் போக்கைப் பார்த்தால் தேர்தல்களுக்குப் பதிலாக தெரு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும்போல் தெரிகிறது என்று குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார். “தெரு ஆர்ப்பாட்டங்கள்…

டாக்டர் மகாதீர்: தோல்வியை ஏற்க முடியாததால் எதிர்க்கட்சிகள் பேரணியை நடத்துகின்றன

13வது பொதுத் தேர்தலில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாததால்  எதிர்க்கட்சிகள் நேற்றிரவு கிளானா ஜெயா அரங்கில் பேரணியை நடத்தியதாக முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் கூறுகிறார். "அவை தோல்வி அடைந்திருக்கா விட்டால் அவை நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டா. அரசாங்கத்துக்கு  நெருக்குதல் கொடுக்க…

மகாதிர்: நஜிப்பின் அடைவுநிலை அப்துல்லாவைவிட மோசமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை

பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவருக்கு முன்னிருந்த அப்துல்லா அஹ்மட் படாவியைவிட மோசமாக சாதிப்பார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். அப்துல்லா ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த வந்தவரான மகாதிர், 12வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு 140 இடங்களைப்…

மகாதீர்: அன்வார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல

புத்ராஜெயாவில் நேற்று பிஎன் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தமது முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக மறைமுகமாக செக்ஸ்  நடவடிக்கைகள் பற்றி கூறினார். பிரதமராக விரும்பும் அன்வார் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல என்றும் அவருடைய ஒரினச் சேர்க்கை…

டாக்டர் மகாதீர்: பெர்க்காசா வேட்பாளர்கள் ‘எங்களுக்காக செயல்படுகின்றவர்கள்’

பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் போன்றவர்களை பிஎன் வேட்பாளர்களாகத் தெரிவு செய்ததை  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தற்காத்துப் பேசியிருக்கிறார். அவர்களை நிறுத்துவதின் மூலம் பிஎன் -னுக்கு வாக்குகள் கிடைக்கும் என அவர் என்டிவி7ல் நிகழ்ச்சி  ஒன்றில் சொன்னார். "பெர்க்காசாவைச் சேர்ந்த மக்களும் பிஎன் -னுக்குத்…

கிட் சியாங்: டாக்டர் மகாதீர் மீது தேச நிந்தனை, அவதூறு…

டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக தமது வலைப்பதிவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை, கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டை சுமத்துவதற்குச் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு 'வாய்ப்பு' கொடுக்கப்பட வேண்டும் என லிம் கிட்…

முடிவு கட்டுங்கள் : ஜோகூர் வாக்காளர்களுக்கு மகாதீர் வேண்டுகோள்

13வது பொதுத் தேர்தல் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்-கின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவதை  உறுதி செய்யுமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஜோகூரில் உள்ள பல்வேறு சமூகங்களைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் Parti Keadilan Rakyat என்ற பிகேஆர் கட்சியின் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம்,…

‘பிஎன் வரும் தேர்தலில் மோசமான அடைவு நிலையை பெற்றால் நஜிப்…

வரும் தேர்தல்களில் பிஎன் நல்ல அடைவு நிலையைப் பெறா விட்டால் தமக்கு முந்திய அப்துல்லா அகமட்  படாவியைப் போன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் விலக வேண்டியிருக்கும் என முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் கூறியிருக்கிறார். "நான் யூக அடிப்படையில் சொல்கிறேன், அவர் நன்றாக செயல்படா…

அன்வார் பயந்துபோய் பெர்மாத்தாங் பாவைவிட்டு ஓடுகிறாராம்; நையாண்டி செய்கிறார் மகாதிர்

மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தம் நடப்பு நாடாளுமன்றத் தொகுதியான பெர்மாத்தாங் பாவில் நின்றால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது, அதனால்தான் அதைவிட்டு “ஓடுகிறார்” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். “அவர் பெர்மாத்தாங் பாவைவிட்டு ஓடிப்போக விரும்புகிறார்... இது சுதந்திர நாடு. அவர்…

டாக்டர் மகாதீர்: கெடா ஆதாயம் கிழக்கு மலேசிய இழப்புக்களை ஈடு…

கெடாவில் பிஎன் மீண்டும் வெற்றி பெறுவது சபா, சரவாக்கில் ஏற்படக் கூடிய நாடாளுமன்ற தொகுதி இழப்புக்களை ஈடு கட்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "கடந்த காலத்தில் கெடாவில் உள்ள 15 நாடாளுமன்ற இடங்களில் 14ல் நாம் வெற்றி பெறுவோம். ஆனால் 2008ல் எப்படியோ…

மகாதீர்: பிஎன் சிலாங்கூரை மீண்டும்எடுத்துக் கொள்ளாவிட்டால் மலாய் உரிமைகள் பறிபோகும்

சிலாங்கூர் மாநிலத்தில் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய  உரிமைகளும் நிலையும் நிலைத்திருப்பதற்கு அந்த மாநிலம் எதிர்க்கட்சிகளிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். சிலாங்கூரில் பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொண்ட எதிர்த்தரப்புக் கூட்டணி அந்த மாநிலத்தில் அரசியலையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும்…

டாக்டர் மகாதீர்: ஊடுருவல்காரர்கள் இஸ்லாத்துக்கு முரணாக நடந்து கொள்கின்றனர்

சபாவில் ஊடுருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களுடைய நடவடிக்கைகள் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானவை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று கூறியிருக்கிறார். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. அவர்கள் செம்போர்ணாவிலும் லஹாட் டத்துவிலும் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் எட்டு போலீஸ் அதிகாரிகளைக் கொன்றுள்ளதாக அவர் சொன்னார். "நாங்கள்…

உங்களுக்கு ஊட்டும் கரங்களைக் கடிக்க வேண்டாம் என மகாதீர் குடியேற்றக்காரர்களுக்குச்…

பெல்டா திட்டங்கள் மூலம் தாங்கள் அடைந்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு வரும் பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பெல்டா குடியேற்றக்காரர்களை கேட்டுக் கொண்டுள்ளார். "சில தரப்புக்கள் பெரிதுபடுத்தி வரும் விஷயங்களுக்குப் பலியாக வேண்டாம். அந்த உணர்வுகள்…

மகாதிருக்கு அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் ‘எண்ணம் இல்லை’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், ஒரு நேரம் தம்மிடம் துணைப் பிரதமராக இருந்து இப்போது மாற்றரசுக்கட்சித் தலைவராகவுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். “நான் (அரசியலிலிருந்து) ஓய்வு பெற்றுவிட்டேன். திரும்பிச் செல்லும் எண்ணம் கிடையாது. ஆனால், நான்  பிரதமராவதற்கு ஒரு…

டாக்டர் மகாதீர்: சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர்

சீன வாக்காளர்கள் இப்போது பக்காத்தான் ராக்யாட் பக்கம் சாய்வதாகத் தோன்றினாலும் அந்த எண்ணத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார். சில சீன தீவிரவாதிகளே அரசாங்க மாற்றத்தை ஆதரிக்கின்றனர் என அவர் இன்று சைனா பிரஸ் நாளேட்டில் வெளியான பேட்டியில் அவர் சொன்னார். மலேசியாவின் வளர்ச்சிக்கு பாரிசான்…