டாக்டர் மகாதீர்: கெடா ஆதாயம் கிழக்கு மலேசிய இழப்புக்களை ஈடு கட்டும்

mahaகெடாவில் பிஎன் மீண்டும் வெற்றி பெறுவது சபா, சரவாக்கில் ஏற்படக் கூடிய நாடாளுமன்ற தொகுதி இழப்புக்களை ஈடு கட்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

“கடந்த காலத்தில் கெடாவில் உள்ள 15 நாடாளுமன்ற இடங்களில் 14ல் நாம் வெற்றி பெறுவோம். ஆனால் 2008ல் எப்படியோ நாம் 11 இடங்களை இழந்து விட்டோம்.”

“அவற்றை மீண்டும் கைப்பற்றுவதற்கு நமக்கு வலிமை உள்ளது. சபா, சரவாக்கில் நாம் சில நாடாளுமன்ற இடங்களை இழந்தால் கெடா அதனைச் சரிக்கட்ட உதவும்,” என அவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

தமது சொந்த மாநிலமான கெடாவில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் 11ல் பிஎன் நிச்சயம் வெற்றி பெற முடியும் என மகாதீர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

கெடா மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்குப் போதுமான சட்டமன்றத் தொகுதிகளையும் பிஎன் பெறும் என்றும் அவர் கருதுகிறார்.

உயர் தலைவர்கள் எடுக்கின்ற எல்லா முடிவுகளையும் கட்சி ஆதரவாளர்கள் சதி செய்யாமல் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

TAGS: