டாக்டர் மகாதீர்: பெர்க்காசா வேட்பாளர்கள் ‘எங்களுக்காக செயல்படுகின்றவர்கள்’

mahathirபெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் போன்றவர்களை பிஎன் வேட்பாளர்களாகத் தெரிவு செய்ததை  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

அவர்களை நிறுத்துவதின் மூலம் பிஎன் -னுக்கு வாக்குகள் கிடைக்கும் என அவர் என்டிவி7ல் நிகழ்ச்சி  ஒன்றில் சொன்னார்.

“பெர்க்காசாவைச் சேர்ந்த மக்களும் பிஎன் -னுக்குத் தேவைப்படுகின்றது. காரணம் அவர்கள் “எங்களுக்காக
செயல்படுகின்றனர்.”

முதலாவதாக அரசாங்கம் பலவீனமாக இருக்கும் போது மலாய் சலுகைகளுக்கு எதிராக தாக்குதல்கள்
தொடுக்கப்படுகின்றன. ஆகவே மலாய்க்காரர்களைப் பாதுகாக்க பெர்க்காசா பாடுபடுகின்றது. பிஎன்
பெர்க்காசாவை ஆதரிப்பதால் அதனை ஆதரிக்க முடியாது என சீனர்கள் வெளிப்படையாகவே
சொல்கின்றனர்.”

“பிஎன் -னுக்கு கூடின பட்சம் தங்கள் (மலாய்க்காரர் அல்லாத) வாக்குகளில் 20 விழுக்காடு மட்டுமே கிடைக்கும்  என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் பெர்க்காசாவைப் புறக்கணிக்க முடியாது. காரணம் அவர்கள்  நமக்காக செயல்படுகின்றனர்.”mahathir1

“நாங்கள் பெர்க்காசா வேட்பாளர்களை நிறுத்தியதால் எங்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என நீங்கள்  சொல்கின்றீர்கள். ஆனால் எங்களுக்காக உள்ள மக்களை நாங்கள் நிராகரித்தால் பிஎன் எங்கே போவது ?  அவர்கள் சொல்வதற்கான பதில் இது தான்,” என மகாதீர் குறிப்பிட்டார்.

என்டிவி 7ல் நேற்றிரவு ஒளிபரப்பான Chat Time நிகழ்ச்சியில் மலாய் உரிமைப் போராட்ட அமைப்பான
பெர்க்காசாவுக்கு அவர் அளிக்கும் ஆதரவு காரணமாக மலாய்க்காரர் அல்லாதார் பிஎன் -னை ஆதரிக்காமல்
போகக் கூடுமா என வினவப்பட்ட போது அவர் அவ்வாறு கூறினார்.

மற்ற குடியேற்றக்காரர்களைப் போல அல்லாமல் சீனர்கள் மலாய்க்காரர்கள் உட்பட உள்ளூர் மக்களுடன்
ஒன்றாகக் கலக்க (assimilate)  விரும்பவில்லை என்றும் மகாதீர் வாதாடினார்.

mahathir2“மலாயாவுடன் ஒன்றாகக் கலந்து விட்ட அரபு நாடுகள், இந்தோனிசியா, இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய  நாடுகளைச் சேர்ந்த மக்களைப் போல் அல்லாது நீங்கள் (சீனர்கள்) தொடக்கத்திலிருந்தே ஒன்றாகக் கலப்பது  என்பது இல்லை என ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.”

“உங்கள் பண்பாட்டையும் உங்கள் மொழியையும் சமயத்தையும் தொடருவதற்காக நீங்கள் (சீனர்கள்)  தொடக்கத்திலிருந்தே ஒன்றாகக் கலப்பது என்பது இல்லை என ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.”

ஒன்றாக கலக்கும் சிந்தனையை ஏற்றுக் கொண்ட மற்றவர்களைப் போல நீங்களும் இருக்க முடியாது. நீங்கள்
ஒன்றாகக் கலக்க விரும்பவில்லை என்றால் நீங்கள் ஒரே மாதிரி எதிர்பார்க்க முடியாது.”

அமெரிக்காவுக்கு குடியேறியதும் அந்த நாட்டுக்கு விசுவாச வாக்குறுதியை குடியேற்றக்காரர்கள் வழங்கும்
நிலையைப் போன்றது தான் இதுவும். அவர்கள் உள்ளூர் மக்களுடன் ஒன்றாகக் கலக்க வேண்டும் என மகாதீர்
சொன்னார்.

 

TAGS: