மகாதீர்: அன்வார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல

mahathirபுத்ராஜெயாவில் நேற்று பிஎன் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தமது முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக மறைமுகமாக செக்ஸ்  நடவடிக்கைகள் பற்றி கூறினார்.

பிரதமராக விரும்பும் அன்வார் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல என்றும் அவருடைய ஒரினச்
சேர்க்கை போக்கு காரணமாக 1998ம் ஆண்டு அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் மகாதீர் சொன்னார்.

அடுத்து மகாதீர் அம்னோ உயர் பதவிகளுக்கு எப்படி உயர்ந்தார் என்பதையும் விவரித்தார். பிரதமராக
வேண்டும் என்ற அவசரத்தில் தமக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதுடன் நண்பர்களுக்கு
உதவுவதாகவும் கூறி என் ஆதரவாளர்களைத் தூண்டி விட முயன்றார்.

“ஆனால் அவருக்கு அந்தப் பதவியில் நாட்டமிருந்ததால் அது நியாயமானது தான். ஏனெனில் நான் என்றென்றும்  பிரதமராக இருக்கப் போவதில்லை. ஆனால் பிரதமராகும் ஆசையுடன் அவருக்கு வேறு நோக்கங்களும்  இருந்தன. அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.”

“அந்த ‘அழுக்கு’ வேலை நாற்றமடிக்கிறது. அவர் அதனை எப்படிச் செய்ய முடியும் ? அது போன்றவர்கள்
பிரதமராக முடியாது,” என்றார் அவர்.

“பிரதமர் அலுவலகம் மிகப் பெரியது. அங்கு அரசாங்க அதிகாரிகள் வருகின்றனர். அவர்களில் சிலர்
இளமையானவர்கள்,” என அவர் சொன்ன போது கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.mahathir1

“அவர் பிரதமரானால் அது போன்ற அதிகாரிகளுக்கு என்ன நடக்கும் என நான் அஞ்சினேன். அவரது கார்  ஒட்டுநர் கூட பாதுகாப்பாக இல்லை. அலுவலகத்தில் உள்ளவர்களுடைய நிலையும் அது தான். அவர்களில்  சிலர் மகாதீர் அழகாக இருப்பர். பெண்கள் மட்டும் அழகானவர்கள் அல்ல அழகான ஆண்களும் உள்ளனர்,”  என மகாதீர் சொன்னார்.

“அவர் பிரதமரானால் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. எல்லாம் போய் விடும். ஆகவே
அவரை என்ன செய்வது என அம்னோவில் உள்ள என் நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் ‘நீக்குங்கள்’
எனக் கூறினர்,” என அவர் தெரிவித்தார்.

பண அரசியல்

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்தமது புத்ராஜெயா நாடாளுமன்றத்
தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அங்கு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஸ் உதவித்
தலைவர் ஹுசாம் மூசா களமிறங்கியுள்ளார்.

1993ம் ஆண்டு அம்னோ கட்சித் தேர்தலில் அப்போதைய துணைத் தலைவர் காபார் பாபாவை எதிர்த்துப்
போட்டியிட்ட போது அன்வார் பண அரசியலில் ஈடுபட்டதாகவும் மகாதீர் குற்றம் சாட்டினார்.

அதன் விளைவாக காபார் முன்னின்று உருவாக்கிய எல்லா சபா அம்னோ தொகுதிகளும் அன்வாருக்கு
ஆதரவு அளித்தன.

1998ம் ஆண்டு நீக்கப்பட்ட பின்னர் அன்வார், குதப்புணர்ச்சி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது
போன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் பின்னர் குதப்புணர்ச்சி
குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் மீது 2008ல் இன்னொரு குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த ஆண்டு அவர் அதிலிருந்து
விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசு தரப்பு மேல் முறையீடு செய்து கொண்டுள்ளது. அது இன்னும்
நீதிமன்றத்தில் தேங்கியுள்ளது.

 

TAGS: