அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு?

மலேசியாவின் முன்னால் நான்காவது பிரதமர். அவருக்கு அடுத்து அப்துல்லா படாவி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக அவருக்கு இடையூறாக இருந்தார். அப்துல்லாவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் நடப்பு அரசுக்குத் தொந்தரவாக இருந்தார். வயதாகி பதவி விலகிய நிலைக்கொள்ளாமை அவரை ஆட்டிப் படைத்தது. மண்டை சூடாகியும் அதிகாரப் பற்று…

தீபக்கின் கூற்றைப் புறக்கணியுங்கள்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை

வணிகரான தீபக் ஜெய்கிஷன் என்னென்னவோ சொல்வார். அதற்கெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, என செராஸில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் குறிப்பிட்டார். பிரதமர் என்ற முறையில்…

‘அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்த வேண்டும்’

அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகா போன்ற வழக்குரைஞர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்த வேண்டும். “ஒருவரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்தியாக வேண்டும். அரசமைப்பைத் திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்”, என்று முன்னாள் பிரதமர்…

மகாதீர்: எதிர்த்தரப்புக் கூட்டணியை விட்டு விலகும் துணிச்சல் பாஸ் கட்சிக்கு…

பாஸ் கட்சி டிஏபி-யை அதிகம் சார்ந்திருப்பதாலும் அதனை நம்புவதாலும் எதிர்த்தரப்புக் கூட்டணியை விட்டு விலகும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு இல்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார். அந்தக் கூட்டணியை விட்டு விலகினால் 13வது பொதுத்தேர்தலில் தனக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்றும் அதனால் தோல்வி…

மகாதீர்: புரஜெக்ட் ஐசியில் அன்வார் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார்

சபாவில் 1990களில் தகுதி பெறாத குடியேறிகளுக்கு குடியுரிமையும் அடையாள அட்டையும் வழங்கும் திட்டத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தமது உத்தரவு இல்லாதிருந்தும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கூறிக்கொண்டார். "அவர் வழக்கமாக நடவடிக்கை முயற்சியை மேற்கொள்வார்; சில சமயங்களில் (தேவைக்கு மேலும்) அதிகமாகச்…

டாக்டர் மகாதிருக்கு எதிராகக் கண்டனக் கூட்டம்

இன்று, 21 என்ஜிஓ-க்களைச் சேர்ந்த சுமார் 20 சமூக ஆர்வலர்கள், மெர்டேகாவுக்குமுன் ஒரு மில்லியன் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர். மகாதிர் அவ்வாறு கூறியது சீனர்கள் மற்றும்…

‘பிஎன் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், டாக்டர் மகாதீருக்குப் பதில் சொல்ல…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு அம்னோ, மசீச, மஇகா,  ஆட்சியாளர் மாநாடு ஆகிய தரப்புக்கள் பதில் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்த அறிக்கை இந்த நாட்டின் மூன்று முக்கிய இனங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தையே கீழறுப்புச் செய்கிறது என அரசமைப்பு சட்ட நிபுணர்…

மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என…

மலேசியா சுதந்திரம் பெற்றதற்கு முன்னர் மலாயாக் கூட்டரசில் இருந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யோசனை கூறியிருக்கிறார். என்றாலும் அது வெறும் யோசனையே என்று அவர்…

புரொஜெக்ட் ஐசி-இல் துங்குவின் பெயரை இழுக்கும் மகாதிர் ஒரு கோழை

சாபாவில் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதை நியாயப்படுத்த முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பெயரை இழுத்திருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை “பழிப்பாவத்துக்கு அஞ்சாத வரலாற்றையே புரட்டிப்போடும் சூழ்ச்சிக்காரர்” என பிகேஆர் வருணித்துள்ளது. “அரச விசாரணை ஆணையம் ஆராய்ந்து வரும் கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஐசி(அடையாள அட்டை)…

டாக்டர் மகாதீர்: ஆம், பிலிப்பீனோக்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை எனக் கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் சட்டப்பூர்வமானவை என அவர் வலியுறுத்தினார். "அந்நியர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் குடிமக்களாவதை மலேசியா ஏற்றுக் கொள்கிறது." "அவர்களில் பலர் சபாவில்…

அன்வார்: டாக்டர் மகாதீர் என்னால் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பொறுப்பேற்பதே முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இப்போது  காணுகின்ற ' மிகப் பெரிய பயங்கரக் கனவு' என அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பெட்ரோலிய நிறுவனங்களுடன் தமது புதல்வர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்பதே மகாதீருடைய முக்கியமான கவலை…

“இந்திய வம்சாவளியினரின் ரத்தம் ஓடுவதால் நான் பெருமை கொள்கிறேன்’, மகாதீர்…

அரசுக்கு இந்நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்கள் அளித்து வரும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும் என்று முன்னாள் பிரதமர் புகழ்ந்துரைத்தார். மலேசியாவில் சிறுபான்மையினராக இந்திய முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எல்லா சமயங்களிலும் தங்களின் பிளவுபடாத ஆதரவை அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்துள்ளனர். இது உண்மையில் நன்றி பாராட்டத்தக்கதாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு…

‘என்இபி-ஆல் மலேசியப் பொருளாதாரம் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டது’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி)-யால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “என்இபி முழுவீச்சில் செயல்பட்டபோது மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது”, என்று புத்ரா ஜெயாவில் கருத்தரங்கம் ஒன்றைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் கூறினார்.  பெர்டானா தலைமைத்துவம்…

மகாதீர்: உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

உதவித் தொகைகள் உண்மையில் அதிகத் தேவையுள்ள மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். நடப்பு உதவித் தொகை விநியோக முறை குறிப்பாக பெட்ரோலிய உதவித் தொகை முறை பலவீனமாக இருப்பதால்…

டாக்டர் மகாதீர்: நன்கு செயல்படாத யாருக்கு எதிராகவும் நான் பேசுவேன்

ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு எதிராக இயங்கிய தாம் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பிரச்சாரம் செய்வதின் மூலம் இரட்டை வேடம் போடுவதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார். "இரட்டை வேடம் ஏதுமில்லை. யாராவது நன்கு செயல்படவில்லை என்றால் நான் யாருக்கு…

“நஜிப் டாக்டர் மகாதீரைச் சாந்தப்படுத்த வேண்டும் என எண்ணுகிறார்”

"பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு தமது சொந்தக் கருத்துக்களை அமலாக்குவதற்கான 'வலிமை இல்லாததால்' அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்." இவ்வாறு கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த முன்னாள் பிரதமர் மகாதீர் "இன்னும் கட்சித் தலைவர்களை அழைத்து…

டாக்டர் மகாதீர்: நாங்கள் சீர்திருத்தம் செய்து விட்டோம், உங்களுக்கு இன்னும்…

சீர்திருத்தங்களில் தான் ஈடுபாடு கொண்டுள்ளதை நிரூபிப்பதற்கு அம்னோ வழி நடத்தும் பாரிசான் நேசனல் அரசாங்கம் நிறையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். புத்ரா உலக வாணிக வளாகத்தில் பூசல்கள், சமரசம் மீதான அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அவர் அதனூடோ நிருபர்களிடம் பேசினார்.…

மகாதிர்: ‘அன்வாரைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே டிஏபி அவரை ஆதரிக்கிறது’

டிஏபி, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அதனாலேயே அவரை ஆதரிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். முன்னாள் பேராக் மந்திரி புசாரை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட மகாதிர், மாநிலச் சட்டமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த…

‘9/11 தாக்குதல் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’

9/11 தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய ஒர் அனைத்துலக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என ஒர் அனைத்துலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கேட்டுக் கொள்கிறது. நியூயார்க்கின் இரட்டைக் கோபுரக் கட்டிடம் இடிந்து விழுந்த அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறைக்கப்பட்ட விஷயங்கள் ஏதும் உள்ளதா…

டாக்டர் எம்: 9/11 அரபுக்களுக்குச் சாத்தியமில்லை, ஆனால் சிஐஏ, மொஸ்ஸாட்…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அரபு பயங்கரவாதிகளே காரணம் என்று சொல்லப்படுவது சரியல்ல என்கிறார். அப்படியொரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தும் திறன் அரபுக்களுக்கு இல்லை. ஆனால், அப்படிப்பட்ட “தெளிவாக திட்டமிடலும் துல்லியமான பயிற்சியும் கச்சிதமாக செய்துமுடிக்கும் திறனும்” அமெரிக்க மத்திய உளவுத்…

டாக்டர் மகாதீர்: மேற்கத்திய சுதந்திரங்கள் பேரிடர்களுக்கு வழி வகுத்து விடும்

சமய சுதந்திரம் உட்பட மேற்கத்திய இலட்சியங்களினால் மலேசியர்கள் "ஈர்க்கப்பட்டு விடக் கூடாது" என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். சமயத்தில் கட்டாயம் கூடாது என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்த கருத்தை நிராகரித்த அவர், மேற்கத்திய சுதந்திரங்களை நாடுவது பல வகையான…

புதல்வர் பற்றி வினவப்பட்ட போது மகாதீர் ஆத்திரமடைந்தார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் ஆலோசகராகப் பணியாற்றும் பெட்ரோனாஸ் அண்மையில் வழங்கிய குத்தகையில் சுயநலன் சம்பந்தப்பட்டுள்ள சாத்தியம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது ஆத்திரப்பட்டார். அவரது புதல்வர் மொஹ்சானி மகாதீர் உதவித் தலைவராக இருக்கும் SapuraKencana Petroleum Sdn Bhdக்கு 836 மில்லியன் ரிங்கிட்…