புதல்வர் பற்றி வினவப்பட்ட போது மகாதீர் ஆத்திரமடைந்தார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் ஆலோசகராகப் பணியாற்றும் பெட்ரோனாஸ் அண்மையில் வழங்கிய குத்தகையில் சுயநலன் சம்பந்தப்பட்டுள்ள சாத்தியம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது ஆத்திரப்பட்டார்.

அவரது புதல்வர் மொஹ்சானி மகாதீர் உதவித் தலைவராக இருக்கும் SapuraKencana Petroleum Sdn Bhdக்கு 836 மில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகளை பெட்ரோனாஸ் வழங்கியுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் அந்தக் குத்தகைகள் கொடுக்கப்பட்டதில் சுயநலன் ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட போது அவர் மிகவும் கிண்டலாகப் பதில் அளித்தார்.

“ஆம் நிச்சயமாக, அவருக்கு (மொஹ்சானி) அது கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் பெட்ரோனாஸுக்கு உத்தரவிட்டதே காரணம். அதனை உங்கள் பத்திரிக்கையில் வெளியிடுங்கள்.”

“எல்லாவற்றுக்கும் நான் தலைமை வகித்தேன். தயவு செய்து என் புதல்வருக்குக் கொடுங்கள், வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என நான் அவர்களிடம் கூறினேன். எல்லா நேரத்திலும் நான் அதனைத்தான் செய்து கொண்டிருந்தேன்.”

“நான் பிரதமராக இருந்த போது எல்லாம் என் பிள்ளைகளுக்கே கொடுக்கப்பட்டன.”

“ஆனால் மற்ற பிரதமர்களுடைய பிள்ளைகளுக்கு எல்லாம் போகும் போது நீங்கள் அது பற்றிக் குறிப்பிடுவதே இல்லை. காரணம் அவர் மிக நல்ல மனிதர்.”

“அவர் உங்களை வாசிக்க அனுமதிக்கிறார், இல்லையா ?” என அவர் சொன்னார்.

TAGS: