‘அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்த வேண்டும்’

1dr mஅரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகா போன்ற வழக்குரைஞர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்த வேண்டும்.

“ஒருவரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்தியாக வேண்டும். அரசமைப்பைத் திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்”, என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று கூறினார்,

“ஆகவே, பிஎன் அரசாங்கத்துக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்”, என்று மகாதிர் கோலாலும்பூர் செராசில், தேசிய பாதுகாப்பு மீது உரையாற்றிய பின்னர் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது கூறினார்.

அரசாங்கத்தை எதிர்ப்பதும் அரசமைப்புப் பற்றிக் கேள்வி எழுப்புவதுமாக உள்ள வழக்குரைஞர் மன்றத் தலைவர்கள், அம்பிகா போன்றோரின் குடியுரிமையைப் பறிப்பது எப்படி என்று கேட்கப்பட்டதற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார்.

 

TAGS: