வணிகரான தீபக் ஜெய்கிஷன் என்னென்னவோ சொல்வார். அதற்கெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, என செராஸில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் குறிப்பிட்டார்.
பிரதமர் என்ற முறையில் நஜிப்மீது எல்லா வகையான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவர்கள் என்று கூறிய அவர், பிரதமராக இருந்த நேரத்தில் தமக்கும் அந்த அனுபவம் உண்டு என்றார்.
நஜிப் குடும்பத்தார் பணம் பெற்றுகொண்டு அதற்குக் கைம்மாறாக அரசாங்கச் சலுகைகளைச் செய்துகொடுத்ததாகக் குறைகூறப்படுவது பற்றிக் குறிப்பிட்டபோது அப்படிப்பட்ட குற்றச்சாட்டைச் சொல்வதற்குச் நீதிமன்றம் போன்றதுதான் பொருத்தமான இடமாகும். அது, குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பதைத் தீர்மானிக்கும் என்றார்.