‘9/11 தாக்குதல் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’

9/11 தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய ஒர் அனைத்துலக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என ஒர் அனைத்துலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கேட்டுக் கொள்கிறது.

நியூயார்க்கின் இரட்டைக் கோபுரக் கட்டிடம் இடிந்து விழுந்த அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறைக்கப்பட்ட விஷயங்கள் ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிவதே அந்த ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும்.

நேற்று நடைபெற்ற அந்த ஒரு நாள் நிகழ்வில் பேசிய அனைவரும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சும் தாக்குதலுக்கு இலக்கான அந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள ‘உண்மைகளை’ கண்டறிய அத்தகைய ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அந்தத் தாக்குதலுக்கு காலஞ்சென்ற அல் காய்டா தலைவர் ஒசாமா பின் லாடேன் மீது பழி போடப்பட்டுள்ளது.

அனைத்துலகக் குழு உறுப்பினர்கள் அந்த யோசனையை மேலும் ஆய்வு செய்வர் என அந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள பெர்டானா அனைத்துலக அமைதி அற நிறுவனத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

“பல யோசனைகளில் அதுவும் ஒன்றாகும். இதற்குப் பின்னர் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆணையத்தை அமைப்பதா இல்லையா என்பதை குழு விவாதிக்கும்,” என மகாதீர் நேற்று மாலை கூறியிருந்தார்.

அந்த 9/11 தாக்குதலை திட்டமிட்டு மேற்கொள்ளும் ஆற்றல் அரபுக்களிடம் இல்லை என்றும் அமெரிக்காவின் சிஐஏ என்ற மத்திய வேவு நிறுவனம் அல்லது இஸ்ரேலிய வேவுத் துறையான மொஸாட் பயிற்சி அளித்த ஏஜண்டுகள் அதனைச் செய்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் நேற்று அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்த போது தெரிவித்தார்.

TAGS: