பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
டாக்டர் எம்: தேர்தலில் தாமதம் எதிர்தரப்புக்குச் சாதகம்
தேர்தலைத் தாமதப்படுத்திக்கொண்டே செல்வது மாற்றரசுக் கட்சிக்கு நன்மையாக அமையும் ஏனென்றால் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அது தேர்தலுக்கு நல்லபடியாக தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் காத்திருந்து தேர்தலை நடத்த முடியும், “ஆனால், அவர் காத்திருக்க, காத்திருக்க மற்றவர்களும்…
மகாதிர்: மலாய்க்காரர் பிளவுக்கு நான் காரணம் அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1998-இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பதவிநீக்கம் செய்ததன்வழி மலாய்க்காரர்களின் பிளவுக்கு வித்திட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார். திரெங்கானுவில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய மகாதிர், மலாயன் யூனியன் காலம் தொடங்கி மலாய்க்கார்கள் பிளவுபட்டுக் கிடப்பதாகக் கூறினார் என சினார் ஹரியானும்…
அந்நியச் செலாவணி மீதான கேள்விகளுக்கு மகாதீர் மௌனம்: ‘முதுமை மறதி’…
1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அந்நிய செலாவணி வாணிகத்தின் மூலம் ஏற்பட்ட 5.7 பில்லியன் ரிங்கிட் இழப்புக்கு பொறுப்பு எனக் கூறப்பட்ட முன்னாள் பாங்க் நெகாரா துணை ஆளுநர் நோர் முகமட் யாக்கோப்புக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது மீதான கேள்வியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தவிர்த்துள்ளார். அதற்குப்…
டாக்டர் மகாதீர் சாட்சியத்தைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கைவிடுவதற்கு முயற்சி
டாக்டர் மகாதீர் முகமட் நேற்றும் இன்றும் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை கைவிடுவது பற்றிப் பரிசீலிக்குமாறு டாக்டர் லிங் லியாங் சி-கின் பிரதிவாதித் தரப்பு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை அனுப்புவதற்கு லிங் தரப்பு விண்ணப்பித்துக் கொண்டுள்ளது. அந்த விவரத்தை லிங்-கின் வழக்குரைஞர் வோங் கியான் கியோங்…
டாக்டர் மகாதீர்: லிங் அமைச்சரவையை ஏமாற்றக் கூடிய திறமை இல்லாதவர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தம்முடன் 17 ஆண்டுகள் அமைச்சரவையில் பணியாற்றியுள்ள டாக்டர் லிங் லியாங் சிக் அமைச்சரவையை ஏமாற்றக் கூடிய திறமை இல்லாதவர் எனக் கூறியுள்ளார். அந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கௌரவமான மனிதர் என தமக்கு அவரைத் தெரியும் என லிங் வழக்குரைஞர் வோங்…
டாக்டர் மகாதீர்: PKFZ விவகாரத்தில் நான் ஏமாற்றப்படவில்லை என நான்…
சர்ச்சைக்குரிய PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் தாம் ஏமாற்றப்படவில்லை என தாம் போலீசாரிடம் சொன்னதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "என் நினைவுக்கு எட்டிய வரையில் அந்தத் திட்டத்துக்கு எந்த அமைச்சரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை," என மகாதீர் இன்று கோலாலம்பூர்…
டாக்டர் மகாதீர்: எதிர்க்கட்சிகளுக்கு போடப்படும் வாக்கு சோரோஸுக்கு செலுத்தப்படும் வாக்கு
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பது, மலேசியாவை காலனியாக்குவதற்கு செல்வந்தர் ஜார்ஜ் சோரோஸ் Read More
போரில் பிழைத்த சோரோஸிடம் டாக்டர் மகாதீர் என்ன சொன்னார்?, ஸ்டீவன்…
ஜப்பானிய துருப்புக்கள் பிரிட்டிஷ் வீரர் ஒருவரைக் கொன்றதை தாம் நேரடியாகப் பார்த்ததை இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்த கோடீஸ்வர நிதியாளர் ஜார்ஜ் சோரோஸிடம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விவரித்துள்ளார். தமது பெர்டானா தலைமைத்துவ அற நிறுவனம் தொடங்கியுள்ள உலக அளவிலான போர் எதிர்ப்பு முயற்சிகளுக்கு,…
லிங்கின் வழக்கில் மகாதிர் சாட்சியம் அளிப்பார்
மோசடி செய்ததாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிர்தரப்புச் சாட்சியாக அழைக்கப்படுவார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. இன்று காலை லிங்கை மறு விசாரணை செய்த அவரின் வழக்குரைஞர் வொங் கியான் கீயோங்,…
டாக்டர் மகாதீர், அமைதித் திட்டத்துக்கு சோரோஸின் உதவியை நாடினார், ஸ்டீவன்…
'என்னைப் பற்றிய உங்கள் எண்ணம் மாறியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது அந்த கோடீஸ்வரரை முதன் முறையாகச் சந்திப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமயங்களுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
அந்தப் ‘பிசாசு’ பேசி விட்டது; ஆனால் மலேசியர்கள் செவிமடுப்பார்களா ?
'மகாதீர் இறைவன் அனுப்பியவர். இந்த ஆட்சி போக வேண்டும் என மலேசியர்களை நம்ப வைப்பதற்கு இவ்வளவு அபத்தங்களை அவர் எப்படி வெளியிட முடியும்' டாக்டர் மகாதீர்: ஒரு கைப்பாவையை பிரதமராக அமர்த்த சோரோஸ் விரும்புகிறார் பார்வையாளன்: வாக்காளர்களைக் கவரவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் பல வகையான வெறுக்கத்தக்க…
டாக்டர் மகாதீர்: சோரோஸ் பிரதமராக ஒரு கைப்பாவையை அமர்த்த விரும்புகிறார்
அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸ் தமக்கு ஏற்றால் போல இயங்கக் கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்கும் முயற்சியின் கீழ் உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு நிதி உதவி செய்து வருவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். "அவர் நமது அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.…
பிஎன் பெரிய அளவில் வெற்றி பெறும் என டாக்டர் மகாதீர்…
பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்பார்க்கிறார். ஆனால் அது நல்ல பெரும்பான்மையைப் பெறும் என அவர் எண்ணவில்லை. அதனால் கூட்டரசு அரசாங்கத்தின் நிலை தொடர்ந்து 'பலவீனமாகவே' இருக்கும் என அவர் சொன்னார். அவர் நேற்று பெர்டானா தலைமைத்துவ…
அன்வார்: பிஎன் என்றென்றும் தோல்வி காணும் என டாக்டர் மகாதீர்…
"பிஎன் பக்காத்தான் ராக்யாட்-டிடம் தோல்வி கண்டால் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்ற டாக்டர் மகாதீர் ஆரூடம் நடந்து விட்டால் அதற்கு பிஎன் கூட்டணியின் சொந்த நடவடிக்கைகளே காரணமாக இருக்கும்." இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். "நீங்கள் (பிஎன்) ஒரு முறை தோல்வி…
அன்வார்: மகாதீர் சொல்வது சரியே, அம்னோ-பிஎன்தான் பிசாசு
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் பல விஷயங்களில் ஒத்துப் போவதில்லை என்றாலும் அம்னோ-பிஎன்தான் பிசாசு என அவர் சொன்னதை ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். "நான் பல விஷயங்களில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் இணக்கமாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு அவரது…
பக்காத்தான் என்றென்றும் ஆட்சி புரிய விரும்பக் கூடும் என எச்சரிக்கிறார்…
தேசிய தலைமைத்துவத்தை மாற்றி சோதனை செய்ய விரும்பும் மக்களை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சாடியுள்ளார். பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆட்சி புரிவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அது ஆட்சியை ஒரு போதும் கை விடாது என அவர் எச்சரித்தார். "அவற்றுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்றும் அவை நல்லபடியாக…
தீவிரவாத எண்ணங்களினால் பிரச்னை இல்லை என்கிறார் டாக்டர் மகாதீர்
தீவிரவாதமாக உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும் Read More
டாக்டர் மகாதிர்: சுதந்திரம் தானாக வந்ததாக நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்
இன்றைய இளைஞர்கள் சுதந்திரம் தானாக வந்ததாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அண்மையில் ‘ஜஞ்ஜி டெமோக்ராசி பேரணி’யில் கலந்துகொண்டவர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதற்கு காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினர், இளம் நிபுணர்கள். அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த அனுபவம் அவர்களுக்கு இல்லை.…
டாக்டர் மகாதீருக்கு சபீனாவை அனுப்பும் முயற்சியில் கர்பால் தோல்வி
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமக்கு எதிராக நடைபெற்று வரும் தேச நிந்தனை வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சபீனா அனுப்ப வேண்டும் என சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபு தாலிப் ஒஸ்மான், அவரை…
Here’s what Dr M said about the rulers…
-Karpal Singh, August 26, 2012. Dr Mahathir Mohamad has challenged me to prove that he has made seditious comments against the royalty during the Parliamentary debates leading up to the 1993 constitutional amendments on the…
மகாதிர்: “மக்களால் அறியப்பட்ட பிசாசுகள் நாங்களே”
அண்மையில் தம் வலைப்பதிவில் இட்டிருந்த ஒரு இடுகை பற்றி விளக்கமளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அதில் ஆளும் கட்சியைத்தான் “பிசாசு” என்று குறிப்பிட்டதாகக் கூறினார். “அதில் பிசாசு என்றது யாரை என்று கேட்கிறார்கள்.நாங்களே மக்கள் அறிந்த பிசாசுகள்.தேவதைகள் என்றது அவர்களை.அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிய…
மகாதிர் ஆட்சியாளர்களை அவமதிக்கவில்லை, அரசு வழக்குரைஞரின் வாதம்
அரசமைப்புச் சட்ட திருத்தங்களை 1993 ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தேச நிந்தனையான எதனையும் கூறவில்லை. மாறாக, அவர் ஆட்சியாளர் அமைப்பு முறையைத் தற்காத்தார் என்று அரசு வழக்குரைஞர் நூரின் படாருடின் இன்று (ஆகஸ்ட் 24) நீதிமன்றத்தில் வாதிட்டார். "அரசமைப்புச் சட்ட…
மகாதிர்: ஒபாமாபோல் அன்வாரும் கெட்டவரே
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஒப்பிட்டுள்ளார்.இருவரும் பெரிய மாற்றங்கள் செய்யப்போவதாகச் சொன்னார்கள் ஆனால், செய்யவில்லை என்றாரவர். ஒபாமா(வலம்)வைப் போலவே அன்வாரும் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.ஆனால், அவை நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்…