சாபா ஆர்சிஐ “பயனற்றது” என்கிறார் மகாதிர்

சாபாவில் நீண்ட காலமாக இருந்துவரும் சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ)அமைப்பதால் “நன்மை ஏதுமில்லை” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் அவரிடம் அது பற்றி வினவியதற்கு, ஆர்சி அமைப்பது வீணான முயற்சி என்றும் விசாரணை முடிவு எதுவாக இருந்தாலும்…

மகாதீர், சபா மக்கள் தொகைப் பெருக்கத்தை நியாயப்படுத்துகிறார்

சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதை எதிர்ப்பது நியாயமற்றது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். அந்த எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் வருணித்தார். சபாவில் குடியேற்றக்காரர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்ததாலும் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாஹாசா மலேசியாவை சரளமாகப் பயன்படுத்துவதாலும் அந்த…

தேசத் துரோக விசாரணை: மகாதீருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்,கர்பால்…

மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதிவிலக்கை அகற்றிய 1993ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் மேலும் நால்வரும் பேசிய விஷயங்களுக்காக ஏன் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை விளக்குவதற்காக அந்த ஐவருக்கும்…

முக்ரிஸ்: என் தந்தையை இரண்டாவது முறையாக சங்கடப்படுத்த வேண்டாம்

கெடாவில் பிஎன் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கு வாக்களிப்பதின் மூலம் கெடா மக்கள் தமது தந்தையார் டாக்டர் மகாதீர் முகமட் மீது கொண்டுள்ள பாசத்தை மெய்பிக்க வேண்டும் என ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த தேர்தலில் கெடாவில் பிஎன் தோல்வி கண்டது மகாதீருக்கு பேரிடியாகும்.…

‘மகாதீரிடம் சர்வாதிகார குணங்கள் இருந்தன’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டிடம் சர்வாதிகாரக் குணங்கள் இருந்ததை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த குணங்கள் நன்மையைக் கொண்டு வந்தனவா அல்லது தீங்கை ஏற்படுத்தினவா என்பதில் அவர்கள் மாறுபட்டுள்ளனர். 1987ம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்…

மகாதிர்: “என்ன செய்தேன்,ஏன் சர்வாதிகாரி என்கிறீர்கள்?”

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்,  தம்மை ஒரு கொடூர சர்வாதிகாரி என்று கூறுவோர் அதை நிரூபிக்க வேண்டும் என்று தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். “ஒரு சர்வாதிகாரியாக அப்படி நான் என்னதான் செய்துவிட்டேன்?”, என்றவர் வினவினார். அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட அந்த முத்திரை, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ காலம்பூராவும்…

லிங்: நான் டாக்டர் மகாதீரை ஏமாற்றத் துணிய மாட்டேன்

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது அமைச்சரவையை ஏமாற்றியதாக தமக்கு எதிராக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். தமது வழக்குரைஞர் விசாரணை செய்த போது லிங் அவ்வாறு சொன்னார்.…

மசீச இளைஞர் பிரிவு: மகாதீர் இளைஞர்களிடமிருந்து விலகிச் சென்று விட்டார்

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள், அவர் இளைய தலைமுறையினரிடமிருந்து விலகிச் சென்று விட்டதைக் காட்டுவதாக மசீச இளைஞர் பிரிவு கூறுகிறது. அந்தக் கல்லூரியின் டிப்ளோமாக்கள் அவற்றின் தரத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மகாதீர் சொல்வது போல…

கூட்டரசு, மாநிலத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதை மகாதீர் விரும்புகிறார்

பக்காத்தான் வசமுள்ள மாநிலங்கள் பொதுத் தேர்தலுடன் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முன் வராவிட்டால் ஆளும் கூட்டணியான பிஎன்-னுக்கு அது நன்மையாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் பிஎன் தனது வளங்களை மாநிலத் தேர்தல்களுக்கும் மாற்றி விடாமல் பொதுத்  தேர்தலில்…

அன்வார்: நான் அதிகாரத்துக்கு வந்துவிடுவேன் என்று மகாதிர் பயப்படுகிறார்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,  தாம் அதிகாரத்துக்கு வருவதை எண்ணி டாக்டர் மகாதிர் முகம்மட் கலக்கம் அடைந்திருப்பதாகக்  கூறினார். “நான் பிரதமர் ஆவதை எண்ணி மிகவும் அச்சம் கொண்டிருக்கும் ஒருவர் உண்டென்றால் அது மகாதிராகத்தான் இருக்க வேண்டும்”.நேற்றிரவு ரவாங்கில் நிதிதிரட்டு நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு…

கிட் சியாங் வெறுப்பது ‘மகாதீர் தத்துவத்தை’, மகாதீரை அல்ல

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை தாம் 'வெறுப்பதாக' கூறப்படுவதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார். தாம் உண்மையில் 'மகாதீர் தத்துவத்தையே' நிராகரிப்பதாகவும் அதற்கு புத்துயிரூட்டப்படுவதை எதிர்ப்பதாகவும் லிம் விளக்கினார். அம்னோ, பிஎன் கொள்கைகளில் 'மகாதீர் தத்துவத்தை' மீண்டும் இடம் பெறச் செய்து அதனை நிலை…

“விலகப் போவதாக” அன்வார் சொல்வது வெறும் தந்திரம் என்கிறார் மகாதீர்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தாம் சொல்வது போல அரசியலிலிருந்து விலக விருப்பம் கொண்டிருந்தால் இனிமேல் நேரத்தை விரயம் செய்யக் கூடாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "அவர்  அரசியலிலிருந்து இப்போதே விலக வேண்டும். பிரதமராவதற்கு அவர் கொண்டுள்ள விருப்பம் விழலுக்கு இறைத்த நீரைப்…

“என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை”

‘மகாதிரிசம்’ என்று கூறப்படுவதைப் புறந்தள்ளிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மாற்றரசுக்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் தம்மைத் திரும்பத் திரும்பத் தாக்கிக் கொண்டிருந்தால் அது அவரையே திருப்பித் தாக்கும் என்று எச்சரித்தார். “மகாதிரிசம் என்று எதுவுமில்லை.நான் நாட்டுக்குச் சேவை செய்தேன். அவ்வளவுதான். மலேசியக் குடிமகன் என்ற…

“ஆட்சியைக் கைப்பற்ற” சிறுபான்மையினர் முயற்சியா?, மகாதீரின் கருத்து விசமத்தனமானது

-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமை கழகம், ஜூலை 1, 2012. பெரும்பான்மை இனம் அமைதியாக இருக்கும் போது சிறுபான்மையினர் தெரு ஆர்பாட்டங்கள் வழி ஆட்சியை கைபற்றினால் மலேசியா ஒரு தோல்விகண்ட நாடாகிவிடும் என்று முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது விசமத்தனமானது.   சிறுபான்மையினர்…

சிறுபான்மையினர் ‘ஆட்சியைக் கைப்பற்ற’ முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்

பெரும்பான்மை மக்கள் மௌனமாக  இருந்து சாலை ஆர்ப்பாட்டங்கள் வழி சிறுபான்மையினர் 'ஆட்சியைக் கைப்பற்ற' அனுமதித்தால் மலேசியா தோல்வி கண்ட நாடாகி விடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். சிறுபான்மையினர் பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசுவது அதிகரித்து வருகின்றது என அவர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில்…

ஒரே மலேசியா இன்னும் மலேசியர்களைக் கவரவில்லை

இந்த நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு சமூகங்களைப் பிரித்து வைக்க வேண்டும் என சீன கல்வியாளர்கள் வலியுறுத்துவதே தடையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "நாங்கள் அது குறித்து ஏதாவது செய்ய முயன்றோம். ஆனால் அவற்றுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எடுத்துக்காட்டுக்கு நாம் மலாய்,…

“நமது ஜனநாயகம் அமெரிக்காவை விட குறைந்த அளவே போலியானது” என்கிறார்…

அமெரிக்கா மக்களை சட்ட ரீதியிலான வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் மருட்டுவதால் அது தான் போலியான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். கனடிய நாளேடான The Globe and Mail நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை போலியான ஜனநாயகவாதி என முத்திரை…

மகாதீர்: தாய்மொழிப் பள்ளிகள் நம்மைப் பிரித்து வைக்கின்றன

குவாந்தானில் சீன சுயேச்சைப் பள்ளிக் கூடத்துக்கு புத்துயிரூட்ட அரசாங்கம் வழங்கியுள்ள சமிக்ஞை குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மகிழ்ச்சி அடையவில்லை. தாய்மொழிப் பள்ளிக்கூட முறைகள் உண்மையில் நாட்டை பிளவுபடுத்தி விட்டதாக அவர் கூறுகிறார். புத்ராஜெயாவில் கட்டுரைப் போட்டி ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் மகாதீர் நிருபர்களிடம்…

மகாதீர்: புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொள்வது குறித்து நான் அஞ்சவில்லை

இந்த நாட்டில் அதிகாரத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றித் தாம் அஞ்சவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் தாம் ஜெயிலில் அடைக்கப்படலாம் என்பதைத் தவிர வேறு எதற்கும் தாம் பயப்படவில்லை என்றார் அவர். தமது தவறான செயல்கள் அம்பலப்படுத்தப்பட்டு…

இணைய சுதந்திரம் பற்றி மீண்டும் சிந்திக்குமாறு மகாதீர் வேண்டுகோள்

இணையம் மீது அரசாங்கத்துக்கு போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது பற்றி மீண்டும் சிந்திக்குமாறு இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளார். நியூ சண்டே டைம்ஸ் ஏட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். மகாதீர், இணையத் தணிக்கை ஏதும் இருக்காது என்பதை உறுதி…