“நமது ஜனநாயகம் அமெரிக்காவை விட குறைந்த அளவே போலியானது” என்கிறார் மகாதீர்

அமெரிக்கா மக்களை சட்ட ரீதியிலான வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் மருட்டுவதால் அது தான் போலியான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

கனடிய நாளேடான The Globe and Mail நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை போலியான ஜனநாயகவாதி என முத்திரை குத்தியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.

அமெரிக்கா உலகம் முழுவதும் மக்களைச் சித்தரவதை செய்கின்றது. அது தான் ‘போலி ஜனநாயகம்’ என்றார் அவர்.

“நாம் (மலேசியா) அந்தக் கட்டத்தை இன்னும் எட்டவில்லை. நாம் போலியானவர்கள் தாம். ஆனால் அவர்களைக் காட்டிலும் குறைந்த அளவில் போலியானவர்கள்,” என அவர் கிண்டலாகக் கூறினார்.

அவ்வாறு முத்திரை குத்தப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை வெளியுறவு அமைச்சு அந்த ஏட்டுக்கு அனுப்பியுள்ளது.

‘மலேசிய அரசியலை அறிந்து கொள்வது : நிதி நிறுவனங்கள் மீதான தாக்கம்’ என்னும் தலைப்பை கொண்ட ஆய்வரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய பின்னர் மகாதீர் நிருபர்களிடம் பேசினார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கு இன அடிப்படையிலான அரசியல் அவசியம் என்பதை அந்த முன்னாள் பிரதமர் தமது உரையில் வலியுறுத்திப் பேசினார். அத்துடன் உண்மையான ஜனநாயகம் என ஒன்றுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்காக மக்கள் தேர்வு செய்த மக்கள் அரசாங்கம் என எதுவும் இல்லை எனக் கூறிய மகாதீர் சில வேளைகளில் சிறுபான்மையினர் கூட ஆட்சி புரியலாம் என்றார்.

எகிப்திலும் துனிசியாவிலும் அரபு எழுச்சியின் போது நிகழ்ந்ததைப் பார்த்தால் அது பெரும்பான்மை மக்கள் மேற்கொண்ட இயக்கம் அல்ல என்றும் சிறுபான்மை மக்களால் தொடங்கப்பட்டது என்றும் தெரியவரும். பின்னர் அது பெரிதாக மாறியது என அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

 

TAGS: