மக்கள் புத்திசாலித் தனத்துடனும் கவனத்துடனும் நட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் கடந்த 55ஆண்டுக்காலமாக இருக்கும் ஆட்சிக்கட்டமைப்பை நிலைநிறுத்த முடியும்.
இவ்வாறு கூறிய முன்னாள் டாக்டர் பிரதமர் மகாதிர் முகம்மட், பாரிசான் நேசனல்(பிஎன்) நிர்வாக முறையே சிறந்தது என்றார்.அது எல்லா இனங்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
“நம் பல்லினப் போக்கின் பயனாகத்தான் இன்று அமைதியும் இணக்கமும் நிலவுகிறது.
“முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், தான் செங் லொக், வீ.தி.சம்பந்தன் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கிய நிர்வாக அமைப்புமுறையை நம் நாடு சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்றுசேர்ந்துதான் நாட்டை மேம்படுத்தினோம்.
“இதுவே சிறந்த அணுகுமுறை”.நேற்று பினாங்கு ஜார்ஜ்டவுனில் அரசுசார்பற்ற அமைப்புகளின் விருந்து ஒன்றில் மகாதிர் இவ்வாறு பேசினார்.மலேசிய மனித மேம்பாட்டுச் சங்கமும் பினாங்கு இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் அவ்விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.
“பிஎன்வாக்குகளை மட்டுமே விரும்பும் கட்சி அல்ல.ஆனால், வேறு வழியும் இல்லை. ஏனென்றால் இந்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் உள்ளன.பிஎன்னை நிராகரித்தால் மாற்றரசுக்கட்சி வெற்றி பெறும்.வெற்றிபெற்றால் நாட்டைச் சீரழித்து விடுவார்கள்”, என்றார்.
திறமையாக செயல்படாத தலைவர்களைக் கட்சி கண்டிக்க வேண்டும் என்றாரவர்.
அந்நிகழ்வில் டாக்டர் மகாதிரின் 87வது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது.மகாதிரின் பிறந்த நாள் ஜூலை 10.
-பெர்னாமா