முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தம்முடன் 17 ஆண்டுகள் அமைச்சரவையில் பணியாற்றியுள்ள டாக்டர் லிங் லியாங் சிக் அமைச்சரவையை ஏமாற்றக் கூடிய திறமை இல்லாதவர் எனக் கூறியுள்ளார்.
அந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கௌரவமான மனிதர் என தமக்கு அவரைத் தெரியும் என லிங் வழக்குரைஞர் வோங் கியான் கியோங் நடத்திய விசாரணையின் போது மகாதீர் சாட்சியமளித்தார்.
அந்தப் பதிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் துன் அப்துல் மஜித் துன் ஹம்சா லிங் ஏமாற்றக் கூடிய திறமை இல்லாதவர் என எப்படி அந்த முன்னாள் பிரதமருக்குத் தெரியும் என வினவினார்.
“குற்றம் சாட்டப்பட்டவருக்கு (பின்புறம் சுட்டிக் காட்டி) மட்டுமே அது தெரியும்,” என துன் மஜித் சொன்ன போது பொது மக்கள் அரங்கில் இருந்த லிங் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
லிங்-கின் பிரதிவாதித் தரப்புக்கு ஆதரவாக சாட்சியமளிக்கு நான்காவது பிரதிவாதித் தரப்பு சாட்சி மகாதீர் ஆவார்.
லிங் மசீச தலைவராக இருந்த காலம் தொட்டு 30 ஆண்டுகளாக அவரைத் தெரியும் என்றும் அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.