மகாதிர்: மலாய்க்காரர் பிளவுக்கு நான் காரணம் அல்ல

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1998-இல் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமைப் பதவிநீக்கம் செய்ததன்வழி மலாய்க்காரர்களின் பிளவுக்கு வித்திட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார்.

திரெங்கானுவில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய மகாதிர், மலாயன் யூனியன் காலம் தொடங்கி மலாய்க்கார்கள்  பிளவுபட்டுக் கிடப்பதாகக் கூறினார் என சினார் ஹரியானும் உத்துசான் மலேசியாவும் அறிவித்துள்ளன அம்னோ நிறுவனர் ஒன் ஜாப்பார், கட்சியிலிருந்து விலகி அப்பிளவை உண்டாக்கினார் என்றாரவர்.

அதன்பின் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா அம்னோவைவிட்டு விலகி செமாங்காட் 46-ஐ உருவாக்கினார்..

“மலாய்க்காரர்கள் நீண்ட காலமாகவே பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். எனவே, நான் 1998-இல் அன்வாரை பதவிநீக்கம் செய்ததன் விளைவாகத்தான் மலாய்க்காரர்கள் பிரிந்து நிற்கிறார்கள் என்று கூறுவது சரியல்ல. அன்வார் ஒழுக்கக்கேடானவர். அவருக்குப் பிரதமராகும் தகுதி இல்லை”, என்றார் மகாதிர்.

அன்வாரை விலக்குவது என்பது தாம் மட்டும் செய்த முடிவல்ல அது அம்னோ உச்சமன்றத்தின் ஒருமித்த முடிவுமாகும் என்றாரவர்.

அன்வாரின் ஒழுக்கக்கேடுகளை மக்கள் பார்ப்பதில்லை.ஏனென்றால், பேச்சுத்திறனைப் பயன்படுத்தி மக்களின் சிந்தனையை திசைதிருப்பி விடுவதில் அவர் கெட்டிக்காரர் என்று மகாதிர் கூறினார்.

TAGS: