டாக்டர் மகாதீர்: தோல்வியை ஏற்க முடியாததால் எதிர்க்கட்சிகள் பேரணியை நடத்துகின்றன

mahathir13வது பொதுத் தேர்தலில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாததால்  எதிர்க்கட்சிகள் நேற்றிரவு கிளானா ஜெயா அரங்கில் பேரணியை நடத்தியதாக முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் கூறுகிறார்.

“அவை தோல்வி அடைந்திருக்கா விட்டால் அவை நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டா. அரசாங்கத்துக்கு  நெருக்குதல் கொடுக்க முயலுவது, பிரச்னைகளை உண்டாக்க முயலுவது சிரமத்தைக் கொடுக்கும். உண்மையில்  அவை ஒர் அரங்கத்தில் அதனை நடத்தியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.”

“ஆனால் அவை விரைவில் அரங்கத்திலிருந்து வெளியேறி சாலைகளுக்கு செல்லும். அதனால் வர்த்தகர்களுக்கு  குறிப்பாக அங்காடி கடைக்காரர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும்,” என்றார் அவர்.

ஜார்ஜ் சோரோஸ் போன்ற அந்நியத் தரப்புக்களும் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும்
மலேசியாவுக்குள் நிதி உதவிகளைச் செய்வதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மகாதீர் சொன்னார்.

ஆனால் அந்த நிதியை யார் பெறுகின்றனர் என்பது தமக்குத் தெரியாது என்றார் அவர்.

ஷா அலாமில் நேற்றிரவு மலேசியா துறைமுக கப்பலோட்டிகள் சங்கத்திடமிருந்து கேப்டன் விருதை வழங்கும்  ‘Master Foreign Going’ என்னும் பட்டத்தை பெற்றுக் கொண்ட பின்னர் மகாதீர் நிருபர்களிடம் பேசினார்.

13வது பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கம் கொண்ட அந்தப் பேரணியில்
ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இது போன்ற பேரணிகள் நாளை ஈப்போவிலும் சனிக்கிழமை பினாங்கிலும் நடத்தப்படும் என அந்தப்
பேரணியில் பேசிய பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

-பெர்னாமா

TAGS: