‘பிஎன் வரும் தேர்தலில் மோசமான அடைவு நிலையை பெற்றால் நஜிப் பதவி துறக்க வேண்டும்’

mahaவரும் தேர்தல்களில் பிஎன் நல்ல அடைவு நிலையைப் பெறா விட்டால் தமக்கு முந்திய அப்துல்லா அகமட்  படாவியைப் போன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் விலக வேண்டியிருக்கும் என முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் கூறியிருக்கிறார்.

“நான் யூக அடிப்படையில் சொல்கிறேன், அவர் நன்றாக செயல்படா விட்டால் நிச்சயம் அவரது பதவி
உறுதியாக இருக்காது,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் தாம் தெரிவித்த அந்தக் கருத்துக்கள் குறித்து விளக்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்ட போது மகாதீர் அவ்வாறு சொன்னார்.

அந்தக் கருத்துக்கள் சூழ்நிலை குறித்த தமது எண்ணங்கள் எனக் குறிப்பிட்ட அவர் அவை நடக்காமலும்
போகலாம் என்றார்.

நஜிப் பிரதமர் பதவியைத் துறந்தால் யார் அவருக்குப் பதில் பொறுப்பேற்க வேண்டிய நபர் யார் எனப் பெயர்
குறிப்பிட மகாதீர் மறுத்து விட்டார்.

“என் மனதில் எந்த வேட்பாளரும் இல்லை. அது நிகழும் என நான் எண்ணவில்லை. அது வெறும் யூக
அடிப்படையிலானது,” என அவர் விளக்கினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்ட மகாதீர் அது நடப்புப் பிரதமரைப் பொறுத்தது என்றார்.

குறிப்பிட்ட சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்படும் என்று எனக்குக் கூறப்பட்டுள்ளது.   நாடாளுமன்றமும் அவ்வாறே விரைவில்   இயல்பாகக் கலைக்கப்பட்டு விடும் என நான் கருதுகிறேன்.”

“அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் விரும்பினால் அதனைச் செய்ய முடியும்.”

என்றாலும் நாடாளுமன்றத்தைக் கடந்த ஆண்டே கலைத்திருக்க வேண்டும் என்ற தமது எண்ணத்தை மகாதீர்
மீண்டும் வலியுறுத்தினார்.

“ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை. நான் பிரதமராக இருந்தால் கடந்த ஆண்டே நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டிருக்கும்.”

டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் போன்ற மூத்த கட்சித் தலைவர்கள் அம்னோ கோட்டை
எனக் கருதப்படும் ஜோகூரில் ‘வாழ்வா தாழ்வா’ போராட்டத்தில் இறங்குவது பற்றிக் கருத்துரைத்த மகாதீர்,
அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றி காண முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
என்றார்.

“ஜோகூர் எப்போது பிஎன் கோட்டையாகும். ஜோகூர் மக்கள் உணர்வுகள் தொடர்பில் ஏதோ ஒன்றை
எதிர்க்கட்சிகள் கண்டு பிடித்திருக்க வேண்டும்.”

“ஜோகூரில் வெற்றி பெற முடியும் என அவை எண்ணுகின்றன. ஆனால் ஒர் உணவின் மகிமை அதனைச்
சாப்பிடும் போது தான் தெரியும். தேர்தலில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம்,” என அந்த முன்னாள்
பிரதமர் கிண்டலாகச் சொன்னார்.

 

TAGS: