உங்களுக்கு ஊட்டும் கரங்களைக் கடிக்க வேண்டாம் என மகாதீர் குடியேற்றக்காரர்களுக்குச் சொல்கிறார்

feldaபெல்டா திட்டங்கள் மூலம் தாங்கள் அடைந்துள்ள நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு வரும் பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பெல்டா குடியேற்றக்காரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

“சில தரப்புக்கள் பெரிதுபடுத்தி வரும் விஷயங்களுக்குப் பலியாக வேண்டாம். அந்த உணர்வுகள் நம்மை அழித்து விடும். அவர்கள் நமக்கு முன்பு உதவியதே இல்லை.”

“500 ரிங்கிட் ஒரே மலேசியா உதவித் தொகை உட்பட நமக்குக் கிடைக்கும் நன்மைகளுக்கு நாம் நன்றியுடன் இருக்கக் கூடாது என்றும் அவர்கள் தருவதை ஏற்றுக் கொண்டு பின்னர் அவர்களுடைய கரங்களைக் கடிக்குமாறும் சொல்கின்றனர். இது சரியான போதனையா ?” என மகாதீர் கூட்டத்தினரிடம் வினவினார்.

அதற்கு நேர்மாறாக நடப்பு அரசாங்கம் பெல்டா குடியேற்றக்காரர்களுடைய வாழ்க்கைத் தரத்தை பெருமளவுக்கு உயர்த்தியுள்ளது. இல்லை என்றால் அந்தக் குடியேற்றக்காரர்கள் இன்னும் வேலையில்லாதவர்களாகத் தான் இருப்பார்கள்.”

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வது மலாய்ப் பண்பாட்டில் ஒரு பகுதியாகும். நாம் அதனை நிலை நிறுத்த வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் அவர்கள் எங்கள் கைகளைக் கடிக்கின்றனர். நமது சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளா விட்டால் பாதுகாப்பற்ற உணர்வு தலைதூக்கி நிலைத்தன்மை சீர்குலைந்து விடும்.”

“மலேசியாவில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள விரும்புகிறோம். மக்கள் எங்களுக்கு உதவுகின்றனர், நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். மக்கள் போட்டியிட்டால் நாம் அவர்களுக்கு நமது வாக்குகளை அளிக்கிரோம்.”

“நமது வாக்குகளை ஏன் வழங்குகிறோம் ? அவர்களுக்கு உதவுவதற்காக. இல்லை என்றால் அவர்கள் தொடர்ந்து வேலை இல்லாதவர்களாகவே இருப்பார்கள்,” என மகாதீர் தெரிவித்தார்.

 

TAGS: