‘அல்லாஹ்’ தடைவிதிப்புக்கு ஏஜி கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல

1 mpஉள்துறை அமைச்சு  ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த  விதித்திருக்கும் தடை  த ஹெரால்ட்  இதழுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அது ஏற்கத்தக்கதே என்று  சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல்  அளித்துள்ள “குறுகலான விளக்கம்” எடுபடாது,  அது ஏற்கத்தக்கதுமல்ல என்று  டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார்.

அந்தத் தடைவிதிப்பை த ஹெரால்ட் இதழுக்கு மட்டுமே பயன்படுத்த முடியாது  என்பதையும் அது நாட்டில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களையுமே கட்டுப்படுத்தும்  என்பதையும் அப்துல் கனி மறந்து பேசுகிறார் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா சாடினார்.

அது, சமய சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கும் கூட்டரசு அரசமைப்பையே நிராகரிக்கிறது என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.

வார இறுதியில், அப்துல் கனி, நாட்டின் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் ஆபத்து விளைவிக்கும் எனக் கருதும் சொல்களுக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் உள்துறை அமைச்சருக்கு உண்டு என்று கூறியிருந்தார்.

TAGS: