உதயகுமார் தனி அறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்

1 uthayaஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் “கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால்” தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இரு தடவைகளில் மொத்தம் 13 நாள்களுக்கு அடைக்கப்பட்டிருந்தார்.

பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியிருந்த கடிதத்தில் இதனை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், உதயகுமார் குற்றச்சாட்டியது போல் “இருட்டறையில்” அடைத்து வைத்திருக்கப்படவில்லை என்று அந்த இலாகா கூறிக்கொண்டது.

அவர் காஜாங் சிறையிலோ வேறு எந்த சிறையிலோ தனி அறையில் பூட்டி வைக்கப்படவில்லை என்று உள்துறை துணை அமைச்சர் அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.

இதர சிறை அறைகளைப் போல்  தனிப்பட்ட அறையிலும் மெத்தை, போர்வை மற்றும் கழிவறை இருக்கின்றன. இதர கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்தான்  உதயகுமாருக்கும் கொடுக்கப்படுகிறது என்றாரவர்.

TAGS: