நாளை உதவித் தொகை இரத்தாவதால் சீனி விலை உயரும்

sugarசீனிக்கு வழங்கப்பட்டுவரும் 34சென் உதவித்தொகை நாளை  தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார்.

இப்போது சீனியின் விலை ஒரு கிலோகிராம் தீவகற்ப மலேசியாவில் ரிம2.50 ஆகவும் கிழக்கு மலேசியாவில் ரிம2.60 ஆகவும் உள்ளது.

இந்நடவடிக்கை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக நிதி அமைச்சருமான நஜிப் குறிப்பிட்டார். இப்போது நாட்டில் 30வயதுக்கும் குறைந்தவர்களில் 2.6மில்லியன் பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை இழத்தல், உறுப்புகளை வெட்டிஎடுத்தல் போன்ற கடுமையான சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

“மலேசியர்கள் அவர்களின் உடல்நலனைக் கட்டிக்காப்பதுடன் உணவிலும் பானங்களிலும் சீனியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்”, என நஜிப் குறிப்பிட்டார்.

இது பிரதமர் நஜிப்பின் தீபாவளி பரிசு!