பிரதமர் துறைக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு

நாட்டின் நிதி பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மக்கள் வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக், அவரது அமைச்சின் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதற்குமுன் இல்லாத அளவிற்கு பெருத்துள்ளது. பிரதமர் துறையின் அடுத்த ஆண்டிற்கான செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரிம16.45 பில்லியன் ஆகும். நடைமுறைச் செலவுக்கு…

நஜிப்: சீனி உதவித் தொகை இரத்தானது தாம்பத்திய உறவுக்கு நல்லது

சீனிக்கான உதவித் தொகையை அரசாங்கம் இரத்துச் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக சீனி ஒருவரின் புணர்ச்சித்திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இன்று காலை கெராக்கான் ஆண்டுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார். நேற்று, அவர் தம் பட்ஜெட் உரையில்,…

ஜிஎஸ்டி கூடுதலான வரியல்ல, முகைதின் யாசின்

நேற்று அறிவிக்கப்பட பொருள் மற்றும் சேவைகள் வரி கூடுதலான வரியல்ல. இவ்வரி நீண்ட காலமாக அமலில் இருந்து வரும் விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாகும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். ஏன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பல அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன என்றும் அவர்…

புதிய வரி விதிப்பின் மூலம் அரசாங்கம் மக்களைத் தண்டிக்கிறது, அன்வார்

பிரதமர் நஜிப் அறித்த 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கையில் பொருள்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது "மக்களைத் தண்டிக்க" உதவுகிறது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இந்த வரி ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கிடையிலான பிளவை மேலும் விரிவாக்க உதவும் என்று கூறிய அன்வார்,…

நாளை உதவித் தொகை இரத்தாவதால் சீனி விலை உயரும்

சீனிக்கு வழங்கப்பட்டுவரும் 34சென் உதவித்தொகை நாளை  தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். இப்போது சீனியின் விலை ஒரு கிலோகிராம் தீவகற்ப மலேசியாவில் ரிம2.50 ஆகவும் கிழக்கு மலேசியாவில் ரிம2.60 ஆகவும் உள்ளது. இந்நடவடிக்கை நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக…