ஜிஎஸ்டி கூடுதலான வரியல்ல, முகைதின் யாசின்

UMNO-muhyiddinநேற்று அறிவிக்கப்பட பொருள் மற்றும் சேவைகள் வரி கூடுதலான வரியல்ல. இவ்வரி நீண்ட காலமாக அமலில் இருந்து வரும் விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாகும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.

ஏன் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பல அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

“ஜிஎஸ்டி குறித்து பிரதமர் ஆற்றிய அசாதாரணமான உரையால் எதிரணியினர் வாயடைத்துப் போய்விட்டனர். அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இறுதியில், நாம் ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்”, என்றார் முகைதின் யாசின்.

பிஎன் செய்தது சரிதான்

விற்பனை மற்றும் சேவைகள் வரிக்கு மாற்றாக ஜிஎஸ்டியை அறிமுகப்படித்தியதின் வழி பாரிசான் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்று மலாக்கா முன்னாள் முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாம் கூறினார்.

நஜிப் பொய் சொல்கிறார்  

ஜிஎஸ்டி இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் என்று கூறப்படுகிறது. நஜிப் மக்களிடம் பொய் சொல்கிறார். இது குறைவான வரி என்றால், வரியின் மூலம் கூடுதல் வருமானம் பெறுவது எப்படி சாத்தியமாகும், நஜிப் ஐயா?, என்று கேட்கிறார் கோலசிலாங்கூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுல்கிலி அஹமட்.

ஜிஎஸ்டி அனைவருக்கும்DAP - Ong Kian Min

ஏன் ஜிஎஸ்டியின் வழி பொருள்களின் விலை மலிவாக இருக்கும் என்று நஜிப் எண்ணுகிறார் என்பது எனக்குத் தெரியும். நான் அவருடன்  ஒத்துப்போக முடியாது.

விற்பனை மற்றும் சேவைகள் வரி அகற்றப்படுவதால் மக்கள் குறைவாகச்  செலவிடுவார்கள் என்று நஜிப் கூறுகிறார்.

“விற்பனை மற்றும் சேவைகள் வரி  விதிக்கப்படும் பொருள்களின்  விழுக்காடு  குறைவாகும். ஆனால், ஜிஎஸ்டி எல்லாவற்றுக்கும் விதிக்கப்படும்.

“நிறுவனங்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விலையை குறைந்தபட்சம் 4 விழுக்காடுகள் உயர்த்துவார்கள். உண்மையில், இதனை எதிர்பார்த்து விலைகள் உயரும் என நான் எதிர்பார்க்கிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.