புதிய வரி விதிப்பின் மூலம் அரசாங்கம் மக்களைத் தண்டிக்கிறது, அன்வார்

BN - Najib Budget 2014பிரதமர் நஜிப் அறித்த 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு அறிக்கையில் பொருள்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது “மக்களைத் தண்டிக்க” உதவுகிறது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

இந்த வரி ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கிடையிலான பிளவை மேலும் விரிவாக்க உதவும் என்று கூறிய அன்வார், பக்கத்தான் ரக்யாட் இந்த ஜிஎஸ்டியை தொடர்ந்து முழு மனதுடன் anwar1எதிர்க்கும் என்று மேலும் கூறினார்.

நஜிப்பின் இந்த பட்ஜெட் ” அடிப்படை விவகாரங்கள் மற்றும் நல்லாளுமை” போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

“சீனிக்கான உதவித் தொகை குறைக்கப்படுவதற்கு வலுவற்ற காரணம் கூறப்பட்டது. நல்லாளுமை பிரச்னை மீது கவனம் செலுத்தப்படவில்லை.

“செல்வந்தர்களுக்கு குறைவான வரி; நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி, ஆனால், அதே வேளை பொதுவான வரி உயர்வு விதிக்கபடுகிறது. இது பெரும்பாலான மக்களைப் பாதிக்கும். இது முரண்பாடானதாகும்”, என்று அன்வார் கூறினார்.