கட்சி பிஎன்னிலிருந்து வெளியேற வேண்டும், கெராக்கான் பேராளர்கள்

Gerakan - Quit BNகட்சி கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியுற்றதைத் தொடர்ந்து கட்சி தொடர்ந்து பாரிசான் பங்காளியாக இருப்பது குறித்து நேற்று நடைபெற்ற கெராக்கான் தேசிய மாநாட்டில் பல பேராளர்கள் கேள்வி எழுப்பினர்.

கெராக்கன் அதற்குரிய மரியாதையைப் பெறவில்லை என்று ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன் கூறினார்.

கெராக்கான் எடுக்கும் தீர்மானங்களை அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் கருத்தில் கொண்டு அதை தேசிய கொள்கையாக அமல்படுத்துகிறதா என்று வினவிய அவர், “நான் அப்படி நினைக்கவில்லை”, என்று மேலும் கூறினார்.

“நிலமை இவ்வாறு இருக்கையில் ஆண்டுதோறும் பொதுக்கூட்டங்களில் நல்ல மற்றும் நியாயமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றை அரசாங்கம் அலட்சியப்படுத்தப்படுகிறது”, என்று அவர் வருத்தமுடன் கூறினார்.

தமது கருத்தை தொடர்ந்து வலியுறுத்திய டான், “நாம் இனிமேலும் அம்னோவின் வளர்ப்பு நாயாக இருக்கக்கூடாது”, என்றார்.

சிலாங்கூர் பேராளரான லீ ஹூய் செங் பிஎன்னை விட்டு கட்சி விலகி அரசியலில் “மூன்றாவது சக்தி” என்ற நிலையைப் பெற வேண்டும். அப்போதுதான் நாம் அன்மோவின் விருப்பு வெறுப்புகளுக்கு அணிபடிய வேண்டியதில்லை என்றார்.

இதர பல பேராளர்கள் கட்சி அதன் முன்னைய பெருஞ்சிறப்பை இழந்து விட்டது என்றும் புதிய தலைவர்கள் அதனை மீண்டும் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கோலாலம்பூர் பேராளர் எலன் டாங் லுவான் காங் கட்சி தலைவர்களின் தனிப்பட்ட தோற்றம் குறித்து பேசினார்.

“ஆனால், நாம் அனைவரும், என்னையும் சேர்த்து, தைரியமற்றவர்கள் ஏனென்றால் வெளியிலுள்ளவர்கள் நம்மை அப்படித்தான் பார்க்கின்றனர்”, என்று எலன் கூறினார்.

நஜிப் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது

கட்சி பிஎன்னிலிருந்து வெளியேற வேண்டும் என்று பேராளர்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து கட்சியின் புதிய தலைவர் மா சியு கியோங்கிடம் கேட்ட போது, தாம் இது குறித்து இன்னும் கடுமையான கோரிக்கைகளை கேள்விப்படவில்லை. ஆனால், இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து கருத்துகள் பெறப்படும் என்றாரவர்.

பிஎன்னில் நாம் ஆற்றக்கூடிய பங்கு இன்னும் உண்டு என்று நான் நினைக்கிறேன். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டை வழிநடத்துவதில் நமக்கு இன்னும் நம்பிக்கை உண்டு. ஆக, நாம் அப்பங்கை ஆற்றுவோம்”, என்று மா கூறினார்.

 

 

TAGS: