லண்டனில் கடந்த இரண்டு நாள்களில் பிரதமர் நஜிப் இரண்டாவது எதிர்ப்பு ஆர்பாட்டத்தை எதிர்கொண்டார். லண்டனில் உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தரங்கில் (டபுள்யுஐஇஎப்) பங்கேற்க வந்திருக்கும் நஜிப்புக்கு இது அவர் எதிர்பாராத ஒரு தீபாவளி வரவேற்பாகி விட்டது.
அப்பொருளாதார கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு வெளியில் ஆர்பாட்டக்காரர்கள் ஊழல்கள் மற்றும் நன்னெறியற்ற நடைமுறைகள் குறித்த வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்தி நின்றனர். ஆட்சேபங்கள் தெரிவித்தனர். ஊழல்களைப் பட்டியலிட்டதுடன் இவற்றை கண்டு தாங்கள் களைத்துப் போய் விட்டதாகவும் கூறினார்.
இதற்கு முன்னர் மலேசியாவில் முதலீடு செய்து அதனால் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான மலேசியாவில் முதலீடு செய்து பாதிக்கப்பட பிரிட்டீஷார் (பிவிஐஎம்) அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது.
ஆனால், நேற்றைய முன்தினம் டபுள்யுஐஇஎப்பின் புரவலரான நஜிப் சிஎன்என்னுக்கு அளித்த ஒரு நேர்காணலில் மனித உரிமைகள் விவகாரத்தில் தமது சாதனைகள் குறித்து டமாரம் அடித்துக் கொண்டார். ஆனால், தாம் ஒரு “மிதவாதி” மற்றும் “ஜனநாயகவாதி” என்று பெருமைப்பட்டுக் கொண்ட நஜிப் அவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மலேசியாவுக்கு வந்தால், நீங்கள் PCA [பழைய ISA ]வில் கைது செய்யப்படுவீர்கள். ஜாக்கிரதை! கைது செய்தவுடன் எல்லா எதிர்கட்சிகளும், அரசு சார்பற்ற இயக்கங்களும் சத்தம் போட எங்கள் நாட்டில் ஜனநாயகம் உண்டு. “We got freedom to speak , but no freedom after speech ”