நேற்று சுங்கை லீமாவ் இடைத் தேர்தல் ஈடுபட்டுள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அத்தொகுதியில் சென்ற இடங்களில் எல்லாம் ஜிஎஸ்டி வரி குறித்து அவர் முன்பு கூறியிருந்ததைத் தற்காத்து பேசினார்.
நேற்றிரவு நடந்த செராமாவில் பேசிய அன்வார் டிவி3 இல் கூறப்பட்டதை நம்பிக் கொண்டு இருப்பவர்களிடம் “ஏன் இந்த மாதிரியான ஊடகத்தைப் பார்க்கிறீர்கள்” என்று கேட்டு, “அது ஒரு பழி வாங்கும் ஏஜெண்ட்” என்று தெரிவித்ததாக கூறினார்.
“ஜிஎஸ்டி வரி அமைவுமுறை உண்மையில் சிறப்பானது. ஆனால், அதன் முழு அமைவும் நல்லதாக இல்லையென்றால் அந்தப் புதிய வரியை அமல்படுத்தக் கூடாது என்றுதான் நாங்கள் கூறினோம்”, என்று அவர் விளக்கமளித்தார்.