பத்துமலை வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் கலந்து கொண்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கிருந்தனர். மஇகா ஏற்பாடு செய்திருந்த இந்த திறந்தவெளி தீபாவளி கொண்டாட்டத்தில் சுற்றுப்பயணிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
காலை மணி 10.15 க்கு அம்னோ மற்றும் பிஎன் தலைவரான நஜிப்பு வந்து சேர்ந்ததும் அவருக்கு மேளதாளம் முழங்க பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
துணைப் பிரதமர் முகைதின் யாசின், அவரின் துனைவியார் நோரைனி, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான், இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் ச. சாமிவேலு மற்றும் மசீச உதவித் தலைவர் டோனல்ட் லிம் சியாங் சாய் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.
மஇகா தலைவர் ஜி. பழனிவேலும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் விருந்தினர்களை வரவேற்றனர்.
மானமுள்ள தமிழன் MICகாரன் வீட்டுக்கு போகாமல் கொண்டாடுவது தான் தமிழனுக்கு சிறப்பு!!!
சமுதாய வியாதிக்கு மருந்து கேட்பதை விடுத்து,
விருந்து கொடுத்தால்,….விருந்தாளிக்கு என்ன அக்கறை.?
விருந்தோம்பல் கலாட்டா ! சிரிப்பா சிரிக்குது !!
ம இ காவின் பத்துமலை விருந்துக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்று சரியா தெரியவில்லை.தேர்தளுக்கு முன் சென்ற வருடம் கிடைத்த அரிசி,சீனி,எண்ணெய், வெங்காயம் எல்லாம் இந்த வருடம் இல்லை. பி என் ஹி ஹி போட்டுவிட்டது .எனக்கு கொஞ்சம் வாய் கெப்புரு ..ஒரு ம இ கா தொகுதி தலைவரிடம் கேட்டு வைத்தேன். “அதெல்லாம் சொம்மாங்க சமூதாயத்த ஏமாற்றத்து” என்று சொன்னார்.
அப்போ பத்துமலை விருந்து என்றேன்….? “வரப்போக ஒரு ஆளுக்கு 10 வெள்ளி செலவு செய்வாங்க. 20 ஆயிரம் பேருன்னா பாருங்களேன்!” அங்க கோயில பிஸ்னெஸ் ஓடும் எல்லாம் நடக்குராஜின் கோயிலோட செட் “ஆப்பு” என்றார். சமஸ்கிருத பத்தம் அபத்தம் போட்டேன், அவர் என்னை விடவே இல்லை.
“தலைவரே ! தீபாவளிக்கு இரண்டு நாள் லீவாமே!பழனிவேலு மகஜர் தந்துடாராமே? அம்மாம் பரிசீல்க்கபடும் என்றதில் பதில் உள்ளதே என்றார் … பரி அல்லது வலை என்றால் சிக்குவது , சீல் என்றால் ஆப்பு, படும் என்றால் படுக்க போடுவது என்று அர்த்தம் சார். என்றார். இன்னாங்க தமிழ் படிச்ச, உங்களுக்கு விளக்கமா சொல்லனுமா? என்று ஒரு போடு போட்டார்.
இதைதான் சாமீ வேலு சொன்னார்ர் பல ஆண்டுகள் சொன்னார் மகாதீர் கேட்டார் ! இப்ப கூட ம இ கா தேர்தல் வருது .. சாமி இதெல்லாம் வேண்டாம்,பிரதமர் அவர்களே ..இருக்ககுர சமுதாய பொருளாதார சிக்கல்ல ஒரு நாள் வரவு போய் மொத்த இனத்தின் வரவு பார்த்தல் கோடி கணக்கில் நட்டம் ,வாகன “தோல்” வசூல் எல்லாம் போச்சி சார் என்று சற்று புத்தி சாளியாகவே பதில் சொன்னார்.
விட வில்லை ..விடை பெற்று போகும் போது இன்னொன்றையும் சொன்னார்..இப்போதே பாத்தீங்களா தீவாளிக்கு நம்ப பத்திரிக்கைகள் 80 பக்கம்.75 பக்கம் போடுவோம் என்று வெறும் விளம்பர வசூல் வேட்டை தான் செய்தனர் . செய்தியோ வெங்காயம், அழுகிய அதே கோசா முட்ட சைபர் .. துச்சு.இன்னொரு நாள் லீவின்னா நம்ப ஏழைங்க பாடு திண்டாட்டம் சார். எல்லாம் நட்ட கணக்கு இது பழனிக்கும் ம இ காவுக்கும் புடிக்கும்சார்.
எம் ஆர் ராத ரவி சொன்ன மாறி , கூடி… கூட்டி கழிச்சு பார்த்தா பழனிவேலுவும் சுப்ராவும் அரசியல் பேர் போட சமுதாயத்துக்கு லீவு போட்டு இவங்க வெளி நாடு லீவுக்கு பரப்பாங்க ” நோ பிரீ” சுலோகம் பாடுவாங்க சார்.
அம்மாம் இரண்டு நாள் லீவுன்னா நரகாசுரனுக்கு மறு நாளும் விருந்தா சார்? என்றதும் அஹஹஹா என்று கிருஷ்ணா பிரமாத்த்மா போல அதான்” ஊளார் போத்த” இருக்கே சிரித்தார். நான் ஓடிப்போனேன் ! நமக்கு மினரல் வாட்டர் தான்.
தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை தேவையில்லை சார் முடிந்தால் தமிழ் புத்தாண்டு பொங்கலுக்கு ஒரு நாள் விடுமுறை கேளுங்க சார்.
கையோடு சித்திரை புத்தாண்டுக்கு ஒரு நாள்,மற்றும் கார்த்திகைக்கு ஒரு நாளும் கேளுங்கள் சார்.
நமது கோரிக்கையை பிரதமர் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கும் மலேசியா த
மிழர்கள்