கர்பால்: இன, சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி

Karpal - Deregister allஅனைத்து இன மற்றும் சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகள் அல்லது மன்றங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அவை எவ்வித வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார்.

“அனைத்து இனவாதக் கட்சிகளின், வருந்தும் வகையில் பாஸ் உட்பட, பதிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். நமக்கு ஒன்றுபட்ட நாடு வேண்டுமென்றால் நாம் தேவைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

“இனம் அல்லது சமயம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் முறையிலான அமைப்புகளை அனுமதிப்பது மிக ஆபத்தானதாகும்”, என்று கர்பால் இன்று பினாங்கில் ஒரு செய்தியாளர் கூட்ட்டத்தில் கூறினார்.

வழக்குரைஞர்களின் சமயம் என்ன என்பதைக் கருதாமல் வழக்குரைஞர் மன்றம் அனைத்து வழக்குரைஞர்களுக்கு உரித்ததாக இருக்கையில், முஸ்லிம் வழக்குரைஞர் சங்கத்தைப் பதிவு செய்திருக்கவே கூடாது என்றாரவர்.

அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துவது சம்பந்தமாக கத்தோலிக்க வெளியீடான த ஹெரால்ட்டுக்கு வழக்குரைஞர் மன்றம் ஆதரவு அளிக்கக் கூடாது என்று அம்மன்றத்திற்கு மிரட்டல் விடுத்த முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஸைனுல் ரிஜால் பாக்காரை, கர்பால் கடுமையாகச் சாடினார்.

“இம்மாதிரியான அமைப்புகள் தொல்லை கொடுப்பவை. அவை இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது”, என்றார் கர்பால்.

 

 

 

 

TAGS: